குலதெய்வத்தை வேண்டி உன் காதை அறுத்தாலும் அது நடக்காது... நெட்டிசனுக்கு சவால் விட்ட மோகன் ஜி

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் மோகன் ஜி.

தற்போது செல்வராகவன், நட்டி ஆகியோர் நடித்துள்ள பகாசூரன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

பகாசூரன் திரைப்படம் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், பகாசூரன் வெற்றிகரமாக பிளாப் ஆகி தோல்வியடைந்து ஊத்திக்க வாழ்த்து என ட்வீட் செய்த நெட்டிசனுக்கு, மோகன் ஜி ஆவேசமாக சவால் விட்டுள்ளார்.

 மோகன் ஜி-யின் பகாசூரன்

மோகன் ஜி-யின் பகாசூரன்

2016ம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. முதல் படத்திலேயே நெகட்டிவான விமர்சனங்களால் பிரபலமான அவர் அடுத்தடுத்து திரெளபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கினார். மூன்று திரைப்படங்களுமே நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், தற்போது பகாசூரன் படத்துடன் வெறித்தனமாக கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார். இந்தப் படத்தில் நட்டி, செல்வராகவன் லீடிங் ரோலில் நடித்துள்ளனர்.

 பகாசூரன் ரிலீஸ் தேதி

பகாசூரன் ரிலீஸ் தேதி

கடந்த ஒரு வருடமாக படப்பிடிப்பில் இருந்த பகாசூரன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்தாண்டே வெளியாகியிருந்தது. அதேபோல் பகாசூரன் ட்ரெய்லரும் ரிலீஸாகி இணையத்தில் வைரலானது. முக்கியமாக செல்வராகவனின் போஸ்டர் ரசிகர்களிடம் அதிக கவனம் ஈர்த்து வந்தது. இந்நிலையில், பகாசூரன் திரைப்படம் பிப்ரவரி 17ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு நேற்று அறிவித்தது. அதேநாளில் தனுஷின் வாத்தி படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 நெட்டிசனின் வித்தியாசமான வாழ்த்து

நெட்டிசனின் வித்தியாசமான வாழ்த்து

தனுஷின் வாத்தி படத்திற்கு போட்டியாக அவரது அண்ணன் செல்வராகவன் நடித்த பகாசூரன் ரிலீஸாவதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வந்தனர். இந்நிலையில், நெட்டிசன் ஒருவர் பகாசூரன் படம் வெற்றிபெறும் என நக்கலாக வாழ்த்துக் கூறி ட்வீட் செய்துள்ளார். அதில் "பகாசூரன் வெற்றிகரமாக பிளாப் ஆகி தோல்வியடைந்து ஊத்திக்க வாழ்த்துகள். ஊஊஊஊ" என கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார். இந்த டிவிட்டர் பதிவு வைரலாகி வந்த நிலையில், இயக்குநர் மோகன் ஜி அந்த நெட்டிசனுக்கு ஆவேசமாக சவால் விட்டுள்ளார்.

 அதுமட்டும் நடக்கவே நடக்காது

அதுமட்டும் நடக்கவே நடக்காது

நெட்டிசனின் டிவிட்டர் பதிவை ரீ-டிவீட் செய்துள்ள மோகன் ஜி, "நீ உன் குல தெய்வத்தை வேண்டி ஒருபக்க காதை அறுத்துக்கிட்டாலும் அது நடக்காது, படம் எல்லாருக்கும் பிடிக்கும்.. வெற்றி படமாக அமையும்.. Screenshot எடுத்து வச்சிக்கோ..." என சவால் விட்டுள்ளார். அதாவது மோகன் ஜி-யின் இந்த ட்விட்டர் பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்து, படம் வெளியான பின்னர் இதுபற்றி பேசலாம் என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் மேலும் மோகன் ஜி-யை ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X