»   »  அஜீத்தை வைத்து பெருசா திட்டம் போடும் மோகன் ராஜா

அஜீத்தை வைத்து பெருசா திட்டம் போடும் மோகன் ராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil
தல தளபதியை இயக்க காத்திருக்கும் மோகன் ராஜா !!- வீடியோ

சென்னை: அஜீத்தை வைத்து படம் எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார் இயக்குனர் மோகன் ராஜா.

சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோரை வைத்து மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படம் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் மோகன் ராஜா ட்விட்டரில் லைவ் சாட் செய்தார்.

ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

வேலாயுதம்

வேலாயுதம் படத்தை அடுத்து தளபதியுடன் மீண்டும் பணியாற்றுவது பற்றி கேட்ட ரசிகரிடம் நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.

நெகட்டிவ்

தலயை வைத்து படம் எடுத்தால் கதை எப்படி இருக்கும்??? சமூகம் அல்லது நெகட்டிவ் அல்லது கமர்ஷியல் என்று கேட்டவரிடம், என் ஸ்டைலில் வித்தியாசமான நெகட்டிவாக இருக்கும் என்றார் மோகன் ராஜா.

படம்

சூர்யா அண்ணாவை வச்சு ஒரு படம் எடுங்க ப்ளீஸ் என்று சூர்யா ரசிகர்கள் சார்பில் ஒருவர் கேட்டுக் கொண்டார். அதற்கு மோகன் ராஜாவோ, நான் இஷ்டமாக உள்ளேன். பார்க்கலாம் என்றார்.

சினிமா

சிவகார்த்திகேயன் பற்றி ஏதாவது சொல்லுங்க சார் என்று ஒரு ரசிகர் மோகன் ராஜாவிடம் கேட்டார். அதற்கு அவர், கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகம் உள்ளவர். அவரின் அர்ப்பணிப்பால் சிகரம் தொடுவார் என்றார்.

சிம்ரன்

கோலிவுட்டில் உங்களுக்கு பிடித்த நடிகர், நடிகை யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு ரகுவரன், சிம்ரன் என்று பதில் அளித்துள்ளார் மோகன் ராஜா.

அடுத்த படம்

சிம்புவை வைத்து அடுத்த படம் எடுக்கிறீர்களா? நிறைய வதந்திகள் வருகிறது, தெளிவுபடுத்தவும்?? என்ற கேள்விக்கு என் அடுத்த படம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

English summary
Director Mohan Raja had a chat session with his fans on twitter on sunday night. When asked about directing a movie with Ajith, he said he would love to do one and would create a unique negative in his style.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X