»   »  ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகிறது தனி ஒருவன் 2?

ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகிறது தனி ஒருவன் 2?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகவிருக்கிறது தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம்.

மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் தனி ஒருவன். 2015-ஆம் ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாகக் கொண்டாடப்பட்டது.


இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் திட்டம் இருப்பதாக முன்பே ஜெயம் ராஜா கூறியிருந்தார்.


ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தனி ஒருவன் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. படம் பார்த்த பலரும் மீண்டும் மோகன் ராஜாவைப் பாராட்டித் தள்ளினர் ட்விட்டரில்.


சிவகார்த்திகேயன் படம்

சிவகார்த்திகேயன் படம்

அப்போது ரசிகர்களிடம் தான் இப்போது இயக்கி வரும் சிவகார்த்திகேயன் படம் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் மோகன் ராஜா. இந்தப் படத்தில் நயன்தாரா, பகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பதையும் தெரிவித்தார்.
தனி ஒருவன் 2

தனி ஒருவன் 2

அப்போது தனி ஒருவன் இரண்டாம் பாகம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மோகன் ராஜா, அதுகுறித்து விரைவில் அறிவிக்கப் போவதாகக் கூறினார்.


25 வது படம்

25 வது படம்

அப்படி இந்தப் படம் உருவானால், ஜெயம் ரவியின் 25வது படமாக இருக்கும். அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் அவர் நடிக்கும் 7வது படம் இது.


English summary
Mohan Raja is planning to make the sequel to his blockbuster Thani Oruvan with Jayam Ravi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil