»   »  நயன்தாரா விஷயத்தில் நான் செய்தது தப்பு தான்: இயக்குனர் மோகன் ராஜா

நயன்தாரா விஷயத்தில் நான் செய்தது தப்பு தான்: இயக்குனர் மோகன் ராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாரா விஷயத்தில் தான் செய்தது தவறு என்பதை ஒப்புக் கொண்டுள்ளார் இயக்குனர் மோகன் ராஜா.

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

நயன், சிவகார்த்திகேயன் ஜோடி சேர்ந்துள்ள முதல் படம் இது. படம் குறித்து மோகன் ராஜா கூறியதாவது,

வேலைக்காரன்

வேலைக்காரன்

சூழ்நிலைக்கேற்ப நீ மாறாதே, உனக்கு ஏற்றபடி சூழ்நிலையை மாற்று என்பதே வேலைக்காரன் படத்தின் ஒரு வரி கதை. அறிவு, ஆதி என்ற 2 வாலிபர்களை பற்றிய படம் வேலைக்காரன்.

நயன்தாரா

நயன்தாரா

தனி ஒருவன் படத்தில் பணியாற்றியபோது எனக்கும், நயன்தாராவுக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டது உண்மையே. மித்ரன், சித்தார்த் அபிமன்யூ கேரக்டர்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை நயன்தாரா கேரக்டருக்கு கொடுக்காதது என் தவறு.

பெருந்தன்மை

பெருந்தன்மை

நான் நயன்தாராவின் கேரக்டருக்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்காதபோதிலும் படத்தை பார்த்த அவர் நான் இன்னும் கோஆப்ரேட் பண்ணியிருக்கலாம் என்றார். அது அவரின் பெருந்தன்மை.

தவறு

தவறு

தனி ஒருவன் படத்தில் செய்த தவறை வேலைக்காரனில் செய்யவில்லை. இந்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் வெயிட்டானது. அவர் அருமையாக நடித்துள்ளார் என்றார் மோகன் ராஜா.

English summary
Director Mohan Raja said it is his fault that he didn't give importance to Nayanthara's character in Thani Oruvan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil