»   »  'தனி ஒருவன்' என்ற தலைப்பினால் என்னை 'பிச்சைக்காரன்' போல பார்த்தார்கள் - மோகன்ராஜா

'தனி ஒருவன்' என்ற தலைப்பினால் என்னை 'பிச்சைக்காரன்' போல பார்த்தார்கள் - மோகன்ராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனி ஒருவன் என்ற தலைப்பை வைத்த போது என்னை பிச்சைக்காரன் போல பார்த்தார்கள், என இயக்குநர் மோகன்ராஜா தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற பிச்சைக்காரன் படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மோகன் ராஜா கலந்து கொண்டு பேசினார்.


அதில் சமீப காலமாக தமிழ் சினிமாவின் செண்டிமெண்ட் உடைந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்

விஜய் ஆண்டனி, சாதனா டைடஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பிச்சைக்காரன். சசி இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நல்ல வசூலால் படத்தைத் துணிந்து தயாரித்த விஜய் ஆண்டனியை, இப்படம் கோடிஸ்வரனாக மாற்றியிருக்கிறது.


வெற்றி விழா

வெற்றி விழா

சமீபத்தில் நடைபெற்ற பிச்சைக்காரன் படத்தின் வெற்றி விழாவில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் மோகன் ராஜாவின் பேச்சு விழாவிற்கு வந்திருந்தவர்களைப் பெரிதும் கவர்ந்தது. அவர் பேசும்போது " இந்தப் படத்தின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.


தனி ஒருவன்

தனி ஒருவன்

தனி ஒருவன் என்று பெயர் வைத்தபோது மிகப்பெரியதலைப்பு பிரச்சினையாக மாறியது. என்ன சார் தனி ஒருவன்? பாவம் சார் அவன் என்று என்னைக் கிண்டல் செய்தனர்.மேலும் தனி ஒருவன் என்று தலைப்பு வைத்த என்னை பிச்சைக்காரன் போலவே பார்த்தார்கள். விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் என்று பெயர் வைத்தபோது அவரை எப்படிப் பார்த்திருப்பார்கள்.
இறுதிச்சுற்று

இறுதிச்சுற்று

இதே போல இறுதிச் சுற்று என்று தலைப்பு வைத்தபோதும் செண்டிமெண்ட் பார்த்தார்கள். ஆனால் படம் தந்த வெற்றி அந்த செண்டிமெண்டை மாற்றி விட்டது. இதைப் பற்றி பேசவே பயமாக இருக்கிறது. ஏனெனில் இதேபோல தலைப்பில் நிறைய படங்கள் வர வாய்ப்புகள் இருக்கின்றன.


நான் கடவுள்

நான் கடவுள்

நான் கடவுள் என்று பெயர் வைத்து விட்டு பிச்சைக்காரன் பற்றியும், பிச்சைக்காரன் என்று தலைப்பு வைத்து தாய்ப்பாசம் பற்றியும் எங்களால் எடுக்க முடியும். இதேபோல விஜய் ஆண்டனி நிறைய வெற்றிகளைக் குவிக்க வேண்டும். உண்மையிலேயே பிச்சைக்காரன் எனது அடுத்த படத்திற்கு தூண்டுதலாக இருக்கும். இதுபோல நிறைய வெற்றிகளை தமிழ் சினிமா பெற வேண்டும்" என்று பிச்சைக்காரன் குழுவைப் பாராட்டியிருக்கிறார்.


English summary
Thani Oruvan Fame Mohan Raja Recently Participate in Pichaikaran Movie Success Meet. He Shared Some Personal Experience in this Event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil