ப்பா.. செம க்யூட்.. அஜித் சிம்ரன் மாதிரி இருக்கீங்க.. தீயாய் பரவும் மோகன் வைத்யா - ஃபாத்திமா பாபு போட்டோ!

சென்னை: மோகன் வைத்யா - ஃபாத்திமா பாபு சேர்ந்து எடுத்துள்ள செல்பி இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

விஜய் டிவியில் கடந்த மே மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் ஜோடிகள். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்ற பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நிகழ்ச்சியின் நடுவர்களாக உள்ளனர். ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் பிரபலங்கள் ஜோடி ஜோடியாக நடனமாடி வருகின்றனர்.

காவிய காதல் பாடல்

காவிய காதல் பாடல்

அந்த வகையில் கடந்த வாரம் ரொமான்ஸ் வாரம் என காவிய காதல் பாடல்கள் கொடுக்கப்பட்டன. இதில் பழைய ரொமான்டிக் பாடல்களுக்கு போட்டியாளர்கள் நடனமாடினர்.

பக்தி ரவுண்டு?

பக்தி ரவுண்டு?

இதனை தொடர்ந்து நடிகை வனிதா காளி வேடமிட்டு நடனமாடிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால் பக்தி ரவுண்டும் இருக்கும் என தெரிகிறது.

ஜோடிகளுடன் செல்பி

ஜோடிகளுடன் செல்பி

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலங்கள் தங்களின் ஜோடிகளுடன் செல்பிக்களை எடுத்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

வைரலாகும் செல்பி

வைரலாகும் செல்பி

இதேபோல் நடனமாடும் வீடியோக்களையும் வெளியிட்டு தங்களுக்காக புரமோஷன் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் மூத்த ஜோடிகளான மோகன் வைத்யாவும் ஃபாத்திமா பாபுவும் சேர்ந்துள்ள செல்பி ஒன்று வைரலாகி வருகிறது.

மாடர்ன் டிரெஸில்..

மாடர்ன் டிரெஸில்..

இந்த செல்பியை மோகன் வைத்யா எடுத்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்திலும் அதனை ஷேர் செய்துள்ளார. இதில் இருவருமே மாடர்ன் டிரெஸில் இளம் ஹீரோ ஹீரோயினை போல் செம கலக்கலாக உள்ளனர்.

அஜித் சிம்ரன்

அஜித் சிம்ரன்

இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், வாலி பட அஜித் சிம்ரன் ஜோடி என இருவரையும் புகழ்ந்துள்ளனர். இதேபோல் மோகன் வைத்யா நடிகை யாஷிகா ஆனந்துடன் எடுத்த செல்பியையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X