»   »  'நமது'... மோகன்லாலுடன் ஜோடி சேரும் கவுதமி!

'நமது'... மோகன்லாலுடன் ஜோடி சேரும் கவுதமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மோகன்லால் - கவுதமி ஜோடி சேர்ந்து நடிக்க மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு படம் தயாராகிறது.

தெலுங்கில் அந்தப் படத்திற்கு 'மனமன்தா' என்றும் தமிழில் 'நமது' என்றும் பெயர் சூட்டியுள்ளார்கள்.

Mohanlal - Gauthami in Namadhu

சாய் ஷிவானி வழங்க, வாராஹி சலனசித்திரம் மற்றும் சாய் கோரப்பட்டி புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் ரஜினி கோரப்பட்டி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

மலையாளத்தில் அமோக வெற்றி பெற்ற ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்தில் மோகன்லால் - கவுதமி ஜோடியாக நடித்தனர். அப்போதிலிருந்தே வெற்றி ஜோடி என்று கேரளாவில் சொல்வார்கள்.

மோகன்லால் - கவுதமியுடன் விஸ்வநாத் - ஹனிஷா ஆம்ரோஷ் இன்னொரு ஜோடியாக நடிக்கிறார்கள். மற்றும் நாசர், ஊர்வசி, சந்திரமோகன், கொல்லப்புடி மாருதிராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

வசனம் மற்றும் பாடல்களை மதன் கார்க்கி எழுதுகிறார்.

எழுதி இயக்குபவர் சந்திரசேகர் ஏலட்டி. இவர் தெலுங்கில் கோபிசந்த் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை இயக்கி இருப்பவர். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

English summary
Gouthami is joining with Mohanlal again for a tri lingual movie titled Namadhu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil