Jailer: தென்னிந்தியாவே தெறிக்க போகுது.. ஜெயிலர் படத்தில் இணைந்த மோகன்லால்.. என்னவொரு மாஸ் லுக்!

சென்னை: கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு, கார்த்தி, சியான் விக்ரம், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகின.

ஆனால், ரஜினிகாந்த் படம் மட்டும் மிஸ். ஆனால், இந்த ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன.

இந்நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் ஹைப்பை ஜெயிலர் படத்தில் மோகன்லால் இணைந்து விட்டார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுத்துள்ளது.

மூன்று முகம்

மூன்று முகம்

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் ஏற்கனவே கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் நடித்து வருகிறார். இந்நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் இணைந்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

மோகன்லால் லுக்

மோகன்லால் லுக்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மோகன்லால் நடிக்க போகிறார் என்கிற தகவல் கசிந்த நிலையில், சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் சேர்த்து லாலேட்டனின் அட்டகாசமான ஜெயிலர் படத்தின் லுக்கையும் வெளியிட்டுள்ளது.

தென்னிந்தியாவே தெறிக்க போகுது

தென்னிந்தியாவே தெறிக்க போகுது

நடிகர் ரஜினிகாந்த், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட மூன்று மாநிலத்தின் முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ள நிலையில், ஜெயிலர் படம் வெளியானால் தென்னிந்தியாவே தெறிக்கப் போகுது என ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்வீட்களை போட்டு டிரெண்டிங்கை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

நெல்சன் மீது நம்பிக்கை

நெல்சன் மீது நம்பிக்கை

விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கிய பின்னர் இயக்குநர் நெல்சன் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வந்தார். ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரமோ வெளியான நிலையிலும் அது பெரிதாக டிரெண்டாகவில்லை. ஆனால், தற்போது மலையாள நடிகர் மோகன்லால் இந்த படத்தில் இணைந்துள்ள அறிவிப்பு வெளியானதும் பெரிய சம்பவம் பண்ணப் போகிறார் நெல்சன் என ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளனர்.

இண்டஸ்ட்ரி ஹிட்

இண்டஸ்ட்ரி ஹிட்

கடந்த ஆண்டு கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் இந்த ஆண்டு அதே போல மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அஜித் vs விஜய் மோதலை விட ரஜினிகாந்தின் ஜெயிலர் vs கமல்ஹாசனின் இந்தியன் 2 மோதல் மிகவும் பிரம்மாண்ட இருக்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X