»   »  ட்விட்டரில் "கிங்"கு ரஜினி, கமல் அல்ல.. மோகன்லால் தான்!

ட்விட்டரில் "கிங்"கு ரஜினி, கமல் அல்ல.. மோகன்லால் தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினி, கமலை ஓரங்கட்டிய மோகன்லால்!- வீடியோ

திருவனந்தபுரம்: ட்விட்டரில் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாஸனை முந்தியுள்ளார் மோகன்லால்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு மல்லுவுட் தவிர தமிழ், தெலுங்கு திரையுலகிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒடியான் படத்திற்காக மோகன்லால் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

லால் ஏட்டன் பார்க்க சின்ன பையன் மாதிரி இருக்கிறாரே என்கிறார்கள் ரசிகர்கள்.

மோகன்லால்

மோகன்லால்

மோகன்லால் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில் ட்விட்டரில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 5 மில்லியனை தொட்டுள்ளது.

நன்றி

ட்விட்டரில் தன்னை 5 மில்லியன் பேர் பின்தொடர்வதை பார்த்து மோகன்லால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அன்புக்கும், நட்புக்கும் நன்றி என்று ட்வீட்டியுள்ளார் அவர்.

ஓவர்டேக்

ஓவர்டேக்

ரஜினிகாந்த் ட்விட்டரில் சேர்ந்த நாளில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்தது. ஆனால் அவரையே மோகன்லால் முந்திவிட்டார்.

கமல்

கமல்

ட்விட்டரில் 4.6 மில்லியன் பேர் ரஜினியையும், 4.5 மில்லியன் பேர் கமல் ஹாஸனையும் பின்தொடர்கிறார்கள். ட்விட்டர் தவிர்த்து ஃபேஸ்புக்கில் மோகன்லாலை 4.7 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.

English summary
Malayalam superstar Mohanlal has overtaken Rajinikanth and Kamal Haasan on twitter. Mohanlal has got 5 million folowers on twitter while Rajini has 4.6 million followers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X