»   »  ஒன்றரை வருஷமாக ஒரு கதாபாத்திரத்திற்கு தயாராகப் போகும் சூப்பர்ஸ்டார்

ஒன்றரை வருஷமாக ஒரு கதாபாத்திரத்திற்கு தயாராகப் போகும் சூப்பர்ஸ்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மகாபாரதா படத்தில் பீமராக நடிக்கவிருக்கும் மோகன்லால் அந்த கதாபாத்திரத்திற்காக ஒன்றரை ஆண்டுகள் வேறு எதிலும் கமிட்டாகப் போவது இல்லையாம்.

மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து மகாபாரதா என்ற படத்தை ஸ்ரீகுமார் மேனன் இயக்க உள்ளார். ரூ. 1000 கோடி செலவில் எடுக்கப்பட உள்ள இந்த படத்தில் மோகன்லால் பீமராக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இது குறித்து மோகன்லால் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

பீமராக நடிப்பதில் மகிழ்ச்சி. இந்தியாவில் உள்ள பல குழந்தைகளை போன்று நானுமம் மகாபாரதம் மற்றும் ராமாயணக் கதைகள் கேட்டு வளர்ந்தவன்.

பீமர்

பீமர்

பீமர் என்றால் நம்பிக்கையான சகோதரர், அவருக்கு நிறைய பசி எடுக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். எம்.டி. வாசுதேவன் நாயரின் ரண்டாம்மூழம் நாவலை படித்த பிறகே பீமரின் எமோஷனல் பக்கம் தெரிய வந்தது.

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

எம்டி சார் தான் பீமர் கதாபாத்திரத்திற்கு என் பெயரை பரிந்துரை செய்துள்ளார். இதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் வாழ்வில் பல காலமாக பீமர் ஒரு பகுதியாகவே உள்ளார்.

தயார்

தயார்

அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு எனக்கு வேறு எந்த கமிட்மென்ட்டும் கிடையாது. பீமர் கதாபாத்திரத்திற்காக என்னை தயார் செய்து கொள்ளப் போகிறேன். போர்க்காட்சிகளில் நடிக்க பல ஆசிரியர்களிடம் பயிற்சி பெறப் போகிறேன் என தெரிவித்துள்ளார்.

English summary
Mohanlal took to social media to announce that he is going to prepare himself for Bheem character for the next one and a half year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil