»   »  'தளபதி'யைத் தொடர்ந்து 'தல'யுடன் நடிக்கும் மோகன்லால்?

'தளபதி'யைத் தொடர்ந்து 'தல'யுடன் நடிக்கும் மோகன்லால்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: அஜீத்- விஷ்ணுவர்த்தன் இணையும் புதிய படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

'வீரம்', 'வேதாளம்' படங்களைத் தொடர்ந்து 3 வது முறையாக அஜீத் -சிறுத்தை சிவா கூட்டணி 'தல 57' படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறது.

சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் துவங்கும் எனக் கூறப்படுகிறது.

மோகன்லால்

மோகன்லால்

மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நடிகர் மோகன்லால். 'இருவர்', 'சிறைச்சாலை', 'உன்னைப்போல ஒருவன்' உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார்.இந்நிலையில் அஜீத்தின் புதிய படத்தில் மோகன்லால் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஜில்லா

ஜில்லா

கடந்த 2014 ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களைக் கவர்ந்த படம் 'ஜில்லா'. இப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக மோகன்லால் நடித்திருந்தார். விஜய்க்கு சமமாக 'ஜில்லா'வில் நடித்திருந்த மோகன்லாலின் நடிப்பு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தல 58

தல 58

இந்நிலையில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தில், மோகன்லால் அவருடன் இணைந்து நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. சரித்திரப் படமாக உருவாகும் இப்படத்தில் அஜீத்திற்கு சமமான ஒரு வேடத்தில் மோகன்லால் நடிக்கப் போகிறாராம். இதற்குமுன் சுரேஷ் கோபி(தீனா), மம்முட்டி(கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) போன்ற மலையாள நடிகர்களுடன் அஜீத் நடித்திருந்தாலும் மோகன்லாலுடன் அவர் இதுவரை நடித்ததில்லை.

விஷ்ணுவர்த்தன்

விஷ்ணுவர்த்தன்

அஜீத்தை வைத்து 'பில்லா', 'ஆரம்பம்' போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தன் தற்போது சரித்திரப் படத்தை கையிலெடுத்திருக்கிறார். எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து இப்படத்தின் கதையை அவர் எழுதி வருகிறார். எனினும் அஜீத்-விஷ்ணுவர்த்தன் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Mohanlal share Screen Space with Ajith for Thala 58.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil