OTT Review: பாபநாசம் ஸ்டைலில் மற்றொரு படம்.. சீட்டின் நுனியில் அமர வைத்த ‘தொடரும்‘ பட விமர்சனம்!

சென்னை: மலையாள சினிமாக்கு என்றே தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகும் படத்தை பார்ப்பதற்கு என்று இங்கு ஒரு கூட்டமே இருக்கு. கடந்த ஆண்டு மலையாள திரைப்படங்களான மஞ்சுமல் பாய்ஸ், பிரேமாலு, ஆடுஜீவிதம் போன்ற திரைப்படங்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. அப்படிப்பட்ட மலையாள ரசிகர்களுக்காக, மோகன்லால் நடித்த க்ரைம், த்ரில்லர் திரைப்படமான 'தொடரும்' திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

ஆப்ரேஷன் ஜாவான என்ற திரைப்படத்தை இயக்கிய தருண் மூர்த்தி இயக்கிய திரைப்படம் தான் தொடரும். இப்படத்தில் மோகன் லால், ஷோபனா, தாமஸ், பின்னு பப்பு, பிரகாஷ் வர்மா போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் தியேட்டரில் வெளியாகி 150 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. தற்போது, இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியல் வெளியாகி உள்ளது.

தொடரும் படத்தின் கதை: படத்தின் ஹீரோவான மோகன்லால், சென்னையில் சென்ட் மாஸ்டராக இருந்துவிட்டு, தன்னுடைய சொந்த ஊருக்கே சென்றுவிடுகிறார். அப்போது, அவரின் குருநாதரான பாரதிராஜா, அவருக்கு தான் பயன்படுத்திய "Ambassador' கார் ஒன்றை பரிசாக கொடுக்கிறார். அந்த காரை வைத்து, தன்னுடைய ஊரில் குழந்தைகளை ஸ்கூலுக்கு அழைத்து செல்வது, மார்க்கெட்டுக்கு காய்கறிகளை இறக்குவது என போன்ற வேலைகளை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார் மோகன்லால். குருநாதர் பரிசா கொடுத்த கார் என்பதால், அந்த கார் மீது மிகப்பெரிய, மதிப்பும் மரியாதையை வைத்து இருக்கும் மோகன், அந்த காரை அவரைத் தவிர வேறு யாரையும் தொடக்கூடாது என்பார்.

Mohanlal Thudarum review OTT
Photo Credit:

கார் விபத்து: இப்படி தனது சொந்த ஊரில், மனைவி ஷோபனா, மகன், மகள் என சந்தோஷமாக வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கிறார் மோகன்லால். ஒரு நாள், ஹாஸ்டலில படித்து வரும் மகன் தாமஸ் மேத்யூ (பவி), தன்னுடைய நண்பர்களை ஊருக்கு அழைத்து வருகிறார். பவியின் நண்பர்கள மோகன்லாலின் காரைப்பார்த்து, அதை ஓட்டுவதற்கு ஆசைப்படுகிறான். ஆனால், வீட்டில் மோகன்லால் இல்லாத நேரத்தில் பவியின் தன் நண்பர்களுடன் சேர்ந்து காரை ஓட்டு விபத்தை ஏற்படுத்திவிடுகின்றனர். இதனால், ஆத்திரப்படும் மோகன்லால் கோவத்தில், பவியை நண்பர்கள் முன்னிலையில் அடித்துவிடுகிறார். இதனால், அவமானமடைந்த பவி, அப்பாவிடம் கோவித்துக்கொண்டு மீண்டும் ஹாஸ்டலுக்கு சென்றுவிடுகிறான்.

படத்தின் சுவாரசியம்: மோகன்லால், உடைந்து போன காரை சரி செய்வதற்காக செட்டில் விடுறாரு, அந்த நேரத்தில் குருநாதரான பாரதிராஜா இறந்துவிட்டதாக தகவல் வர, மோகன்லால் சென்னைக்கு வந்து சடக்குகளை செய்துவிட்டு, ஊருக்கு திரும்புகிறார். அப்போது தான், தன்னுடைய கார் வழக்கு ஒன்றில் சிக்கி காவல் நிலையத்தில் இருப்பது தெரிகிறது. இதனால், கவலை அடையும் மோகன்லால், காரை எப்படியாவது வெளியில் கொண்டுவந்துவிட வேண்டுமென சப் இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சுகிறார். ஆனால், அவர் வேண்டுமென்ற தரமுடியாது என்று வீம்பு பிடிக்கிறார்.

பவிக்கு நடந்தது என்ன: இதையடுத்து நண்பர்கள் சப் இன்ஸ்பெக்டர் அப்படித்தான் நடந்து கொள்வான், நீ நேராக இன்ஸ்பெக்டர் ஜார்ஜை பார்த்து பேசு நிச்சயம் அவர் காரை கொடுத்துவிடுவார் என்று சொல்ல, நண்பர்களுடைய பேச்சை கேட்டு, இரவு நேரத்தில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜை பார்த்து விஷயத்தை சொல்ல, இன்ஸ்பெக்டர் ஜார்ஜ், சாவியை மோகன்லாலில் கொடுத்து, நீங்க தாராளமா எடுத்து கொண்டு போகலாம் என்கிறார். அந்த நேரம் பார்த்து, சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் ஜார்ஜின் காதில் ஏதோ சொல்ல. இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மோகன்லாலை தடுத்து நிறுத்தி. கான்ஸ்டபில் தங்கைக்கு இன்று திருமணம், நாங்க எல்லாரும் போகிறோம் நீயும் எங்களை அழைத்து செல் பணம் தருகிறேன் என்று சொல்கிறார். இதைக்கேட்டு மோகன்லால், சரி சார் நான் வருகிறேன் என்று அனைவரும் கிளம்புகின்றனர்.

எதிர்பாராத திருப்பம்: பல மையில் தூரம் சென்ற பிறகு, காட்டுக்குள் போகும்படி இன்ஸ்பெக்டர் ஜார்ஜ், சொல்ல, மோகன்லால், காட்டுக்குள் வண்டி போகாது, எல்லாம் நடந்து போங்க என்று சொல்கிறார். இதைக்கேட்டு ஆத்திரப்படும், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ், மோகன்லாலில் தலையில் துப்பாக்கியை வைத்து, இந்த கார் டிக்கில ஒரு பிணம் இருக்கும், அத புதைப்பதற்காகத் தான், எங்கே வந்தோம், என்று சொல்ல மோகன்லால் அதிர்ச்சி அடைகிறார். ஆனால், அந்த காரில் இருப்பது யார்.. யாரை இவர்கள் கொன்றார்கள் என்ற எதுவுமே மோகன்லாலுக்கு தெரியவில்லை. அதே நேரம் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால், உன்னோட குடும்பம் உயிரோடு இருக்காது என்று மிரட்டுகிறார் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்.

மகன் எங்கே: இதனால், மோகன்லால் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மனசுக்குள் வைத்து கஷ்டப்படுகிறார். இந்த நேரத்தில் தான், ஹாஸ்டலுக்கு போன மகன் போன் செய்தால் எடுக்கவில்லை என்று ஷேபானா சொல்ல, மோகன்லால் மகனை பார்ப்பதற்காக ஹாஸ்டல் செல்கிறார். அப்போது தான்,மோகன்லாலின் மகன் பவி, ரெண்டு நாளைக்கு முன்பே ஊருக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்றது தெரியவருகிறது. மகனை பல இடத்தில் தேடும் மோகன்லால், அதேபோல் ஸ்டேஷனில், மகனை காணவில்லை என புகார் கொடுக்கிறார். புகார் கொடுத்துவிட்டு வெளியே வரும் போது தான், தன்னுடைய மகனின் பைக் அங்கு இருப்பதை கவனிக்கிறார். இதைப்பார்த்து சந்தேகப்படும் மோகன்லால், தன்னுடைய மகனுக்கு என்ன ஆச்சு என்ற தேடி, இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் கொலை செய்து புதைத்தது தன் மகன் தான் என்பது தெரியவருகிறது.

அட்டகாசமான திரைப்படம்: தன்னுடைய மகனை இன்ஸ்பெக்டரும் எஸ்ஐயும் சேர்ந்து ஏன் கொலை செய்தார்கள்.. ஹாஸ்டலில் இருந்த மகன் எப்படி எங்கே வந்தான்... அவனை கொல்வதற்கான காரணம் என்ன? அப்படி பல விஷயங்களை ஆராய்ச்சி செய்து கடைசியில் காரணத்தை கண்டுபிடித்துவிட்டு, இன்ஸ்பெக்டரையும், எஸ்ஐயையும் பழி வாங்குகிறார் மோகன்லால். பாபநாசம் திரைப்படம் போல இந்த திரைப்படத்திலும் அடுத்தடுத்த, ட்விஸ்டுகளுடன் ஒரு ஃபேமிலி திரில் திரைப்படமாகவே இருக்கிறது. த்ரிஷம் திரைப்படத்திற்கு பிறகு இந்த திரைப்படம் மோகன்லாலுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது. அடுத்தடுத்த திருப்பங்கள் நிறைந்த ஒரு ஃபேமிலி த்ரில்ல திரைப்படமாகவே உள்ளது. த்ரிஷ்யம் திரைப்படத்திற்கு பிறகு இந்த திரைப்படம் மோகன்லாலுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. க்ரைம், த்ரில்ல பட விரும்பிகளுக்கு இந்த திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X