நம்ம லோகேஷுக்கா.. அதிர்ச்சியில் டிவி உலகம்.. ஓடி வந்து கை கொடுத்த நண்பர்கள்!

சென்னை : உண்மையிலேயே நட்பை விட வேறு அருமையான உறவு இந்த உலகில் எதுவுமே இல்லைங்க. திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் லோகேஷுக்கு நண்பர்கள் ஓடி வந்து கை கொடுத்து உதவியுள்ளனர்.

நடிகர் மற்றும் தொகுப்பாளரான லோகேஷை மொக்கை ஆப் தி டே எனும் ஆதித்யா தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பார்த்திருப்போம். மேலும் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். நானும் ரவுடிதான் படத்திலும் ஒரு மறக்க முடியாத கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார்.

 Mokkai of the Day Lokesh admitted in hospital

லோகேஷக்கு இடது கை மற்றும் இடது கால் செயலிழந்து மூன்று நாட்களுக்கு முன் பக்கவாதத்தால் பாதிக்கபட்டுள்ளார். இந்நிலையில் அவரின் குடும்பமும் நண்பர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அவர் பணிபுரிந்து வந்த சன் நெட்ஒர்க் முதல் உதவியை செய்தாலும் அதற்கு மேலும் லோகேஷின் மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக 5 முதல் 7 லட்சம் வரை தேவைபட்ட நிலையில் அவரின் நண்பர்கள் இந்த தகவலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளனர் .

 Mokkai of the Day Lokesh admitted in hospital

நேற்றில் இருந்து இந்த சமூக வலைத்தளங்களில் இந்த தகவல் தீயாய் பரவியது. இதை பார்த்த அவரின் பல நண்பர்களும் பல ரசிகர்களும் மற்றும் சினிமா பிரபலங்களும் தங்களின் பணத்தை அவர்கள் நண்பர்களுக்கு இணையம் வாயிலாக பகிர ஒரே நாளில் மருத்துவ செலவிற்கு தேவைப்பட்ட மொத்த பணமும் சேர்ந்தாகிவிட்டது .

 Mokkai of the Day Lokesh admitted in hospital

இதனை அடுத்து அவரின் நெருங்கிய நண்பர் மற்றும் இணை நடிகரான குட்டி கோபி பணத்தை உடனடியாக கொடுத்து லோகேஷை காப்பாற்ற உதவிய அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி தெரிவித்து ஒரு காணொலியை பதிவிட்டுள்ளார் . அதில் குட்டி கோபி சன் நிறுவனம் பெரும் உதவியை செய்திருந்தாலும் தேவைப்பட்ட நேரத்தில் நண்பனுக்குகாக உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் மேலும் லோகேஷை நாளை ஐ.சி.யூவில் இருந்து பொதுப்பிரிவிக்கு மாற்றுகிறார்கள். அவரை பார்க்க நினைப்பவர்கள் வந்து பார்க்கலாம் என்றும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X