»   »  கோவாவில் குடிபோதையில் தவறாக நடந்தார்: பிரபல இயக்குனர் மீது பெண் புகார்

கோவாவில் குடிபோதையில் தவறாக நடந்தார்: பிரபல இயக்குனர் மீது பெண் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: க்வீன் பட இயக்குனர் விகாஸ் பஹல் கோவா சென்றபோது குடிபோதையில் தன்னிடம் தவறாக நடந்ததாக இளம்பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற க்வீன் பாலிவுட் படத்தை இயக்கியவர் விகாஸ் பஹல். அவர் இயக்குனர் அனுராக் கஷ்யப், மது மந்தனா வர்மா, விக்ரமாத்தியா மோத்வானே ஆகியோருடன் சேர்ந்து ஃபான்டம் பிலிம்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த தயாரிப்பு நிறுவனத்தில் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட்டுக்கும் சரி பாதி பங்கு உண்டு.

கோவா

கோவா

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட வேலையாக கோவா சென்ற இடத்தில் விகாஸ் குடிபோதையில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக ஃபான்டம் பிலிம்ஸில் பணியாற்றும் இளம்பெண் அனுராக் கஷ்யப், மதுவிடம் புகார் அளித்துள்ளார்.

விகாஸ்

விகாஸ்

பாலியல் புகாரை அடுத்து தயாரிப்பு நிறுவன பதவியில் இருந்து விகாஸை நீக்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து விசாரணை நடத்த குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாம்.

முதல் முறை அல்ல

முதல் முறை அல்ல

விகாஸ் மீது பாலியல் புகார் வருவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஏற்கனவே பல பெண்கள் புகார் அளித்துள்ளனர் என்று ஃபான்டம் பிலிம்ஸுடன் தொடர்புடைய ஒருவர் தெரிவித்துள்ளார்.

மறுப்பு

மறுப்பு

தான் எந்த பெண்ணிடமும் தவறாக நடக்கவில்லை என்று விகாஸ் பஹல் தெரிவித்துள்ளார். புகார் அளித்த பெண்ணை சந்தித்து பேச விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

English summary
A young woman employee of Phantom films has given molestation complaint against Queen director Vikas Bahl.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil