»   »  பிரபல நடிகை மானபங்க சம்பவத்தை நினைத்து பயந்து நடுங்கும் சக நடிகைகள்

பிரபல நடிகை மானபங்க சம்பவத்தை நினைத்து பயந்து நடுங்கும் சக நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பிரபல நடிகை மானபங்கப்படுத்தப்பட்டதை அறிந்து தங்களுக்கு கோபமாகவும், பயமாகவும் உள்ளதாக சக நடிகைகள் சிலர் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திருச்சூரில் இருந்து கொச்சி செல்லும் வழியில் காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Molestation incident scares fellow actresses

இந்நிலையில் இது குறித்து சக நடிகைகள் கூறியிருப்பதாவது,

ப்ரியா மணி

இது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. ஒரு நடிகைக்கு இது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாத கொடுமை. படப்பிடிப்புக்காக நடிககைள் கண்ட நேரத்தில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இந்த சம்பவத்தால் சொல்ல முடியாத அளவுக்கு கோபம் அடைந்துள்ளேன் என ப்ரியா மணி தெரிவித்துள்ளார்.

ராதிகா பண்டிட்

ஹீரோயின்களுக்கு கார்கள் தான் பாதுகாப்பான இடம். ஓய்வெடுக்க, டச்சப் செய்ய காரை பயன்படுத்துகிறோம். இந்நிலையில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது கவலை அளிக்கிறது. எனக்கு பாதுகாப்பான உணர்வு இல்லை, பயம் தான் ஏற்படுகிறது என கன்னட நடிகை ராதிகா பண்டிட் கூறியுள்ளார்.

க்ரிட்டி கர்பந்தா

நாம் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதையே இந்த சம்பவம் நிரூபிக்கிறது. நம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுப்படுத்தினாலும் யாரை நம்புவது என்று தெரியவில்லை. எனக்கு தற்போது மிகவும் பயமாக உள்ளது என நடிகை க்ரிட்டி கர்பந்தா தெரிவித்துள்ளார்.

சான்வி ஸ்ரீவஸ்தவா

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் எனக்கு பயமாக உள்ளது. இதுவரை நான் கார் டிரைவரை நினைத்து கவலைப்பட்டது இல்லை. காரில் தான் பாதுகாப்பாக உணர்ந்தேன். காரில் பயணம் செய்யும்போது இனி தூங்கவே மாட்டேன். தவறு செய்பவர்கள் செய்து கொண்டே இருக்கிறார்கள் என கன்னட நடிகை சான்வி கூறியுள்ளார்.

English summary
Actresses Priya Mani, Radhika Pandit, Kriti Karbhanda are scared after hearing about popular actress' molestation incident.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil