»   »  பலாத்காரம் செய்து வீடியோ எடுப்போம்: பிரபல நடிகையை கடத்தி மிரட்டிய விஷமிகள்

பலாத்காரம் செய்து வீடியோ எடுப்போம்: பிரபல நடிகையை கடத்தி மிரட்டிய விஷமிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்புரம்: வீடியோ எடுக்கவிடாவிட்டால் அபார்ட்மென்ட்டுக்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்வோம் என மலையாள நடிகையை காரில் கடத்தியவர்கள் மிரட்டியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வரும் கேரளாவை சேர்ந்த நடிகை ஒருவரை அவரது முன்னாள் கார் டிரைவர் உள்பட 7 பேர் சேர்ந்து காரில் கடத்தி மானபங்கப்படுத்தினர்.

இது குறித்து நடிகை வனிதா எனும் மலையாள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

கார்

கார்

நான் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது கேட்டரிங் வேன் ஒன்று எங்கள் வாகனத்தை பின்னால் இருந்து இடித்தது. அதில் இருந்து இறங்கி வந்த 2 பேர் எங்கள் காருக்குள் ஏறினார்கள்.

பயம்

பயம்

சிறிது தூரம் சென்ற பிறகு மேலும் 2 பேர் காரில் ஏறினார்கள். எனக்கு பயத்தில் வியர்த்துக் கொட்டியது. அவர்கள் என் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்கள்.

வீடியோ

வீடியோ

கடைசியில் மேலும் ஒருவர் அந்த ஆள் தான் முக்கிய வில்லன். அவர் காரில் ஏறியதும் வீடியோ எடுக்க அனுமதிக்காமல் அடம்பிடிக்காமல் இருக்குமாறு கூறி என் செல்போனை பறித்துக் கொண்டார்.

பலாத்காரம்

பலாத்காரம்

வீடியோ எடுக்க அனுமதிக்காவிட்டால் எங்கள் அபார்ட்மென்ட்டில் 5 பேர் உள்ளனர். அங்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுப்போம். அந்த வீடியோவை என்ன செய்வோம் என எங்களுக்கே தெரியாது என்றார்.

செல்போன் எண்

செல்போன் எண்

என்னை காரில் வீடியோ எடுத்த பிறகு ஒரு இடத்தில் அவர்கள் கீழே இறங்கி சென்றனர். அப்போது டீல் பேச என்னுடைய செல்போன் எண்ணை கேட்டார்கள். இவ்வளவு செய்த உங்களால் என் செல்போன் எண்ணை கண்டுபிடிக்க முடியாதா என்ன என்று நான் கேட்டேன்.

பிரார்த்தனை

பிரார்த்தனை

காரில் சிலுவை தொங்கிக் கொண்டிருந்தது. நான் அதை பார்த்து பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தேன். எனக்கு ஏற்பட்ட பயத்தை சொல்லி விவரிக்க முடியாது என்றார் நடிகை.

English summary
A young actress who was abducted and molested said that her molestors threatened to assault her sexually.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil