»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தற்கொலை செய்து கொண்ட நடிகை மோனலின் ஆவி அவர் வசித்த அபார்ட்மெண்ட்டில் சுற்றி வருவதாக வதந்திகிளம்பியுள்ளது. இதையடுத்து அந்த அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள் ஒரு பிரபல சாமியாரை வைத்து சிரப்பு யாகம்நடத்தியுள்ளனர்.

சென்னை வடபழனி ஆர்க்காடு டெரஸ் அபார்ட்மென்ட்டில் தான் நடிகை மோனல் குடியிருந்தார். சமீபத்தில் அவர் தற்கொலைசெய்து கொண்டார். இதையடுத்து அந்தக் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் பயங்கர பீதியில் உள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாக சுற்றி வரும் என்ற நம்பிக்கை இருப்பதால்,மோனலின் ஆவியும் அவ்வாறே சுற்றி வருவதாக இந்த அபார்ட்மெண்ட்வாசிகள் நம்புகின்றனர்.

இதனால் இரவில் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சும் இவர்கள் சமீபத்தில் ஆவியை சாந்தி செய்வதற்காக ஒரு சாமியாரை வரவழைத்து பூஜையும், யாகமும் நடத்தியுள்ளனர்.

-மோனலின் ரகசிய காதல் டைரி எங்கே?:

நடிகை மோனல் வீட்டிலிருந்து அவன் அந்தரங்க டைரியை டான்ஸ் மாஸ்டர் கலா வீட்டினர் எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மும்தாஜ் மூலமாகஅந்த டைரி கலாவிடம் போய்ச் சேர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நடிகை மோனல் தனது வளர்ப்புத் தாயின் கொடுமை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீஸ் தரப்பில் முதலில் கூறப்பட்டு வந்தது.ஆனால், அவரது காதலர் பிரசன்னா கைவிட்டது தான் காரணம் என்பது பின்னர் தெரியவந்தது.

இந் நிலையில் மோனலின் அக்கா நடிகை சிம்ரன் செய்தியாளர்களை சந்தித்து பல பகிரங்க புகார்களைக் கூறினார்.

டான்ஸ் மாஸ்டர் கலாவின் தம்பி பிரசன்னாவை மோனல் காதலித்து வந்தார். ஆனால் அதை கலாவின் குடும்பத்தார் ஏற்றுக் கொள்ளவில்லை.அவர்களது மோனலை தொலைபேசியில் அழைத்து மிரட்டி வந்தனர். மேலும் பிரசன்னா பொம்பளைத்தனமான காதலில் இருந்து பின்வாங்கினார். இதனால் மனம் நொந்து மோனல் தற்கொலை செய்து கொண்டார் என்று சிம்ரன் கூறினார்.

மேலும், மோனல் வீட்டிற்கு சென்ற நடிகை மும்தாஜ், அங்கிருந்த பணம், மோணலின் டைரி மற்றும் முக்கிய பொருட்களைஎடுத்துச் சென்று விட்டதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

சிம்ரனின் இந்த பரபரப்பு புகார்களை கலா குடும்பத்தினரும், மும்தாஜும் மறுத்துள்ளனர்.

மும்தாஜிடம் போலீஸ் விசாரணை:

இந்த நிலையில் மோனல் வீட்டிலிருந்த டைரியை திருடியது யார் என்று சிறப்புப படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மும்தாஜிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

தனது காதல் விவகாரம் குறித்து டைரியில் விரிவாக மோனல் எழுதியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மோனல் தற்கொலைசெய்து கொண்ட தினத்தன்று வீட்டுக்கு வந்தது யார், யார் என்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

டான்ஸ் மாஸ்டர் கலா, அவரது தம்பி பிரசன்னா, தங்கை பிருந்தா, நடிகை மும்தாஜ், அவரது பி.ஆர்.ஓ. ரியாஸ் உள்ளிட்ட சிலரிடம்முதல் கட்டமாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

டான்ஸ் மாஸ்டர் கலா, அடிக்கடி மோனலிடம் போனில் பேசியுள்ளதாகவும் ஒரு பேச்சு உள்ளது. தனது தம்பியை மறந்துவிடுமாறும், இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

அதேபோல, மோனலை மறந்து விடுமாறு பிரசன்னாவையும் கலா குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர். அவர்களது நெருக்கடிகாரணமாக மோனலிடம் பிரசன்னா கடுமையாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது.

இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக மனம் நொந்த மோனல் தற்கொலை முடிவுக்கு போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

டி.சி.பி தலைமையில் தனிப்படை:

உண்மையில் மும்தாஜ், சிம்ரன், மோனல் ஆகியோர் நல்ல நண்பர்களாகவே இருந்துள்ளனர். ஆனால் டான்ஸ் மாஸ்டர் கலாவின்வேண்டுகோளின் பேரில்தான், மோனல் வீட்டிலிருந்த சில முக்கிய சாட்சியங்களை மும்தாஜ் கலைத்துள்ளார் என்று சிம்ரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கிண்டி துணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் தனிப்படை போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். சிம்ரன் குற்றம் சாட்டியுள்ள அத்தனை பேரிடமும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும் என்று மாநகர போலீஸ்கமிஷனர் விஜயக்குமார், டிஜிபி நெய்ல்வால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil