»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் தோல்வி காரணமாக நடிகை மோணல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. காதலன் பெயராக ராஜு சுந்தரம்பெயரும் அடிபடுகிறது.

இவர் சிம்ரனின் காதலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை சிம்ரன் திடீரென கழற்றிவிட்டுவிட்டார். கமல்ஹாசனுடன் அவர்இணைத்துப் பேசப்பட்டு வருகிறார்.

நடிகை சிம்ரனின் தங்கை நடிகை மோணல், ஞாயிற்றுக்கிழமை சென்னை வடபழனியில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்து கொண்டார். இந்தசம்பவம் தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மோணல் ஏன் தற்கொலை செய்து கொண்டதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று திரைப்பட வட்டாரத்தில் கருதப்படுகிறது.

சிம்ரனும், ராஜு சுந்தரம் ஆகியோர் தான் முதலில் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது காதலில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இந்தவிரிசலுக்கே ராஜு சுந்தரம்- மோணல் இடையே இருந்து வந்த நெருக்கம் தான் காரணம் என்று இப்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து சிம்ரனுக்குத் தெரிய வந்தவுடன் மோணலிடம் சிம்ரன் சீறியுள்ளார். ஆனால், அதை மோணல் மறுத்துள்ளார். இதுதொடர்பாகஇருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்தே மோணல் தனி வீடு பார்த்துப் போனதாகக் கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் கமலின் அறிமுகம் சிம்ரனுக்குக் கிடைத்தது. இதையடுத்து ராஜு சுந்தரத்தை தூக்கி எறிந்தார் சிம்ரன்.

இது குறித்து ராஜூவுக்கு ஆதரவாக சிம்ரனிடம் சண்டை போட்டுள்ளார் மோணல். அப்போது ராஜூவுக்கும் மோணலுக்கு இடையே உள்ளநெருக்கத்தைச் சுட்டிக் காட்டி சிம்ரன் பதிலுக்கு சண்டை போட்டுள்ளார்.

இந்த சண்டை அவர்களிடையே தொடர்ந்து வந்தது என்று கோடம்பாக்கம் வட்டார்ததில் விசாரித்தபோது தகவல் கிடைத்தது. இது எந்தஅளவுக்கு உண்மை என்று தெரியவில்லை,

அதே நேரத்தில் மேலும் ஒரு செய்தியும் கசிந்து கொண்டுள்ளது. மோணலுக்கு ஒரு காதலன் இருந்ததாகவும், அவர் மோணலை காதலிப்பதுபோல நடித்து ஏமாற்றி விட்டதாகவும், ஏற்கனவே சிம்ரன்-ராஜு சுந்தரம் காதல் தோல்வியால் மன வருத்தத்தில் இருந்த மோணலுக்கு தனதுகாதல் தோல்வி பெரும் அதிர்ச்சியைக் கொடுத்ததாகவும், அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது

பிரேதப் பரிசோதனையில் இது தற்கொலை தான் என்பது தெளிவாகிவிட்டது. அவரது உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.அவர்கள், மோணலின் உடலை, விமானத்தில் மும்பைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். விமானத்தில் மோணலின் தாயார் வீணா, சகோதரர்செளரவ் ஆகியோரும் உடன் சென்றனர்.

சிம்ரன் தற்போது கனடாவிலிருந்து மும்பை வந்து கொண்டுள்ளார். அவர் வந்து சேர்ந்தவுடன் இறுதிச் சடங்குகள் நடக்கும் என்று மோணல்குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பசோதனை முடிந்த பிறகு மோணலின் உடலை நடிகர் சங்கத் தலைவர்விஜயகாந்த், பொதுச் செயலாளர் சரத்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மோணலின் உடலுக்கு நடிகர்கள் தியாகு, மனோஜ், நடிகைகள் மும்தாஜ், சங்கவி, விந்தியா, காயத்ரி ரகுராம் ஆகியோர் இறுதி அஞ்சலிசெலுத்தினர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil