For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  புட்டி கண்ணாடி.. வகிடெடுத்த முடி.. பழம்னு நினைச்சிட்டியா.. அவர் தான் மணி ஹெய்ஸ்ட்டுக்கே மாஸ்டர்!

  |

  சென்னை: கொஞ்சம் பேட்மேன்.. கொஞ்சம் ஜோக்கர்.. இரண்டுமே சேர்த்த கலவை தான் மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸின் ஹீரோ புரொஃபஸர்.

  புட்டி கண்ணாடி, வகிடெடுத்த முடியை பார்த்து பழம்ன்னு நினைச்சிட்டியா என வேலையில்லா பட்டதாரி படத்தில நம்ம தனுஷ் பேசும் அதே வசனம் இந்த மணி ஹெய்ஸ்ட் மாஸ்டருக்கும் அப்படியே பொருந்தும்.

  ஓம் மந்திரத்திற்கு முன்பு நிர்வாணமாக நின்ற பிரபல நடிகை.. கடவுள் என கோவில் சிற்பங்களுடன் ஒப்பீடு!ஓம் மந்திரத்திற்கு முன்பு நிர்வாணமாக நின்ற பிரபல நடிகை.. கடவுள் என கோவில் சிற்பங்களுடன் ஒப்பீடு!

  உலகம் முழுவதும் சுமார் 65 மில்லியன் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் ஒரு மந்திர வெப் சீரிஸ் மணி ஹெய்ஸ்ட்டின் கதாநாயகன் புரொஃபஸர் செர்ஜியோ மார்க்குயினாவின் கதாபாத்திர சித்தரிப்பு குறித்து இங்கே காண்போம்.

  புரொஃபஸர்

  புரொஃபஸர்

  ஸ்பெயின் நாட்டில் உள்ள ராயல் மின்ட் எனும் பணம் அச்சடிக்கும் வங்கியை கொள்ளை அடிக்கப் போகும் ஹீரோ, பாகுபலியை போல ஆஜான பாகுவாக இல்லை. சாதாரண உயரம், கண்ணாடி அணிந்து கொண்டு, தனித்துவமான நடிப்பு, எப்போதுமே எதையோ யோசித்துக் கொண்டு, பிளான்களை போட்டே சாதிக்கும் புரொஃபஸர் கதாபாத்திரத்தில் நடிகர் ஆல்வரோ மார்ட்டே மிரட்டி இருக்கிறார்.

  மணி ஹெய்ஸ்ட் ஹீரோ

  மணி ஹெய்ஸ்ட் ஹீரோ

  அலெக்ஸ் பினா உருவாக்கி உள்ள மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸில் பணத்தை கொள்ளை அடிக்கும் கும்பலில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் டோக்கியோ, நைரோபி, பெர்லின், டென்வர், ரியோ என ஊர் பெயர்களாக வைக்கப்பட்டு இருக்கும். 45 வயது மிக்க ஸ்பெயின் நடிகர் ஆல்வரோ மார்ட்டே 5 முறை ஆடிசனுக்கு பிறகே புரொஃபஸர் ரோலுக்கு தேர்வாகி உள்ளார்.

  எல்லாம் கலந்த கலவை

  எல்லாம் கலந்த கலவை

  பேட்மேன் கொஞ்சம், ஜோக்கர் கொஞ்சம் என பல சூப்பரான கதாபாத்திரங்கள் சேர்ந்த கலவை தான் இந்த புரொஃபஸர் கதாபாத்திரம். ஜேம்ஸ் பாண்ட் போல கோட் ஷூட் போட்டுக் கொண்டு கூலாக பெரிய பெரிய காரியங்களை ஹேண்டில் செய்வதும், தனக்கான கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு அவர்களுக்கு சூது கவ்வும் விஜய்சேதுபதி போல பாடம் நடத்துவது என எல்லாம் சேர்ந்த கலவையாக அந்த கதாபாத்திரம் இருப்பதாலேயே உலகளவில் பல ரசிகர்களை சம்பாதித்துள்ளார்.

  கேன்சர்

  கேன்சர்

  புரொஃபஸர் கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தி உள்ள நடிகர் ஆல்வரோ மார்ட்டேவுக்கு, மூக்கு கண்ணாடி அணியும் பழக்கமே இல்லையாம். மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸில் வரும் புரொஃபஸர் கதாபாத்திரத்திற்காகத் தான் கண்ணாடியை அணிய பழகிக் கொண்டாராம். கடந்த 2011ம் ஆண்டு தனது இடது காலில் புற்றுநோய் கட்டிகளால் பாதிக்கப்பட்ட ஆல்வரோ தீவிர சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டுள்ளார்.

  அந்த படத்தின் காப்பியா?

  அந்த படத்தின் காப்பியா?

  மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸில் நடிக்க முதலில் ஜேவியர் குட்டரஸ் எனும் ஸ்பெயின் நடிகரைத்தான் படக்குழு தேர்வு செய்தது. ஆனால், அவர் Campones எனும் வெப்சீரிஸில் நடிக்க கமீட் ஆன நிலையில், ஆல்வரோ மார்ட்டோ தேர்வானார். தனது முதல் ஆடிஷனில், வங்கி கொள்ளை கதையா? அப்படின்னா Ocean's Eleven படத்தை காப்பி அடிக்கப் போறாங்க என நினைத்ததாகவும், அதற்கு ஜியார்ஜ் க்ளூனியைத் தான் கேஸ்டிங் பண்ணனும் நினைத்ததாக பின்னர் பேட்டி ஒன்றில் ஆல்வரோ தெரிவித்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

  ஹைலைட்டே இதுதான்

  ஹைலைட்டே இதுதான்

  உலகம் முழுவதும் 65 மில்லியன் ரசிகர்களின் இல்லங்களில் இந்த மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸ் இப்படியொரு மாயம் செய்ய காரணமே அதன் எதிர்பாராத ட்விஸ்ட்டுகள் தான். கிறிஸ்டோபர் நோலன் படங்களில் வருவது போல அடிவயிற்றை கலங்க வைக்கும் படியான தீம் மியூசிக்கை இசையமைத்து Manel Santisteban அசத்தி இருப்பதும் இந்த வெப் சீரிஸின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

  English summary
  However, this article here attempts to draw up a brief psychological sketch of one of the fan favourites from the show- ‘the professor’, played by Alvaro Morte
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X