»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜயக்குமார் வீட்டில் வைத்திருந்த ரூ. 10 லட்சம் பணம் காணவில்லை என்று போலீஸில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர்விஜயக்குமார்- இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளா தம்பதியின் மிகப் பெரிய வீடு, போரூரைஅடுத்துள்ள ஆலப்பாக்கத்தில் உள்ளது.

மாபெரும் அரண்மனை போன்ற அந்த வீட்டில் பல லிப்டுகளும் உள்ளன. இங்கு பல வேலையாட்களும் சமையல்ஆட்களும் பணியாற்றி வருகின்றனர்.

வீட்டின் 3-வது மாடியில் உள்ள அறையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் பணத்தைக் காணவில்லைஎன விஜயக்குமார் கூறியுள்ளார்.

முதலில் கொள்ளை போனதாக தகவல் வந்ததே தவிர எவ்வளவு பணம் திருடு போனது என்றுதெரிவிக்கப்படவில்லை. இப்போது தான் அந்த விவரம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஆலப்பாக்கம் காவல் நிலையத்தில் விஜய்குமாரே நேரில் புகார் கொடுத்துள்ளார்.

இந்தக் கொள்ளையில் கார் டிரைவர் உள்ளிட்ட 3 வேலையாட்கள் மீது சந்தேகம் உள்ளதாக விஜயக்குமார் தனதுபுகாரில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Please Wait while comments are loading...