நான் ஒரு Pan Sexual ஸ்டார்.. என் பாலினத்தை அறிந்து அவமானமடைந்தேன்.. மனம் திறந்த மோனிகா டோக்ரா!

மும்பை: பாடகியும் நடிகையுமான மோனிகா டோக்ரா தான் ஒரு இரு பாலின தன்மை கொண்டவர் என்பதையும் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளையும் முதல் முறையாக ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

ஆல்ட் பாலாஜி மற்றும் ஜி5 ஓடிடியில் கடந்த ஆண்டு வெளியான The Married Woman வெப்சீரிஸில் பீப்ளிக்காவாக மோனிகா டோக்ரா அசத்தலாக நடித்திருப்பார்.

ஆனால், அவருக்குள் சிறுவயது முதலே இருந்து வந்த இப்படியொரு பாலின பிரச்சனை பற்றி ரசிகர்களுக்கும், உலகத்துக்கும் முதல் முறையாக வெளிப்படையாக கூறியுள்ளார்.

மோனிகோ டோக்ரா

மோனிகோ டோக்ரா

இயக்குநர் சாஹிர் ரஸா இயக்கத்தில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான The Married Woman வெப்சீரிஸில் படு போல்டாக நடித்திருந்தார் மோனிகா டோக்ரா. சொந்தமாக ஏகப்பட்ட ஆல்பம் பாடல்களை வெளியிட்டு தனது கருத்துக்களை எடுத்து உரைத்து வருகிறார். அதே போல ஓரினச் சேர்க்கையாளர்கள் சமூகமான LGBT சமூகத்தினருக்கு தனது ஆதரவு குரலை தொடர்ந்து கொடுத்து வருகிறார். இவர் தான் ஒரு Pan Sexual என்பதை சமீபத்தில் வெளிப்படுத்தி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

Pan Sexual

Pan Sexual

கே, லெஸ்பியன் என ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், Pan Sexual என்பது அவர்கள் பெண்ணாகவே இருப்பார்கள். ஆனால், அவர்களுக்குள் பெண் தன்மையும், ஆண் தன்மையும் மாற்றி மாற்றி அதிகரித்து காணப்படும் ஒரு வித குழப்பான நிலை தான். இதுவும் இயற்கையின் ஒரு வித்தியாசமான இயல்பு தன்மை தான் என்பதை சமீப காலமாக பலரும் உணர்ந்து வருகின்றனர். 6 ஆண்டுகளுக்கு முன்பாகத் தான் தனக்கு Pan Sexual என்கிற ஒரு வார்த்தையே அறிமுகமானது என்றும், பின்னர், தனக்கு அது தான் செட்டாகும் என்பதையும் புரிந்து கொண்டதாக அந்த பேட்டியில் மோனிகா கூறியுள்ளார்.

பாலியல் சீண்டல்கள்

பாலியல் சீண்டல்கள்

குழந்தை பருவமாக இருந்த போதே ஏகப்பட்ட பாலியல் சீண்டலுக்கு நான் ஆளானேன். உறவினர்கள் நான் உறங்கும் போது எனக்கு பாலியல் ரீதியாக பல தொல்லைகளை கொடுத்துள்ளனர். நான் ஒரு டாம் பாயாகத் தான் வளர்ந்தேன். ஆரம்பத்தில் நான் ஒரு ஆண் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், எனக்கு மார்பகங்கள் வளர ஆரம்பித்ததும் என் வாழ்க்கையே போய் விட்டதாக வேதனைப்பட்டேன் என மனம் நொந்து பேசியுள்ளார்.

Recommended Video

Reba Monica John | எனக்கு எனக்கு Lucky colour | Filmibeat Tamil
திருமணத்தை மறைத்தேன்

திருமணத்தை மறைத்தேன்

என் பெற்றோர்கள் என்னை கட்டாயப்படுத்தி ஒருத்தருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். மீடியா மற்றும் பொதுவெளியில் எனக்கு திருமணம் ஆனதையே முற்றிலுமாக மறைத்து விட்டேன். என்னை திருமணம் செய்து கொண்டவரை என் உடல் நிலையை எடுத்து சொன்னேன். அவர் உண்மையிலேயே புரிந்து கொண்டார். அதன் காரணமாகவே அவர் மீது மேலும், காதல் வளர்ந்தது. ஆனால், திருமண வாழ்க்கைக்கு நான் செட் ஆக மாட்டேன் என்பதை உணர்ந்து இருவரும் பிரிந்து விட்டோம் என்றும் கூறியுள்ளார். பாலிவுட் பிரபலம் மோனிகா டோக்ராவின் இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், போல்டாக தனது நிலைப்பாட்டை ஒளிவு மறைவின்றி சொன்னதற்காக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X