»   »  மூன்றாம் பிறை ரீமேக்.... முதலில் இந்தியில்... பின்னர் தமிழில்.. ஆனா எடுபடுமா?

மூன்றாம் பிறை ரீமேக்.... முதலில் இந்தியில்... பின்னர் தமிழில்.. ஆனா எடுபடுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவுக்கு தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்த முக்கிய படமான பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை மீண்டும் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கிறது.

இந்தியாவின் பிரபல ஒளிப்பதிவாளர் - திரைப்பட மேதைகளில் ஒருவரான பாலு மகேந்திராவின் இயக்கத்தில் கமல் ஹாசன் - ஸ்ரீதேவி நடிப்பில் 1982-ம் ஆண்டில் வெளியானது மூன்றாம் பிறை.

Moondram Pirai to be remade in Hindi?

நல்ல விமர்சனங்கள் மற்றும் வசூலுடன் ஓடிய திரைப்படம் மூன்றாம் பிறை.

இந்தப் படத்தில் வெகு சிறப்பாக நடித்தமைக்காக கமல் ஹாசனுக்கு தேசிய விருதை மூன்றாம் பிறை பெற்றுத் தந்தது. இதே கதை இந்தியில் 'சத்மா' என்ற பெயரில் தயாரானது.

1983-ல் வெளியான இந்தப் படத்திலும் நாயகனாக கமல் ஹாசனும், நாயகியாக ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். இந்தியிலும் இந்தப்படம் சக்கைப்போடு போட்டது. தற்போது இதே சத்மா திரைப்படத்தின் ரிமேக்கை இந்தியில் தயாரிக்க பிரபல விளம்பரப்பட தயாரிப்பாளரான லாயிட் பாப்ட்டிஸ்டா தீர்மானித்துள்ளார்.

கமல் ஹாசன் - ஸ்ரீதேவிக்கு இணையாக நடிக்கக் கூடியவர்களைத் தேர்வு செய்து வருகிறார்களாம்.

பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான ராஜ் சிப்பியிடம் இருந்து இந்தப் படத்தின் இந்தி உரிமையை வாங்கியுள்ளாராம் பாப்டிஸ்டா.

தமிழில் மூன்றாம் பிறை படத்தை தயாரித்த தியாகராஜனிடம் இருந்து உரிமையை வாங்குவதற்காக முயன்று வருகிறார்கள். முதலில் இந்தியிலும், பின்னர், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் மூன்றாம் பிறையை ரீமேக்கப் போகிறார்களாம்.

எல்லாம் சரி...

அந்தக் கதை இன்றைய சூழலில் எடுபடுமா? அன்றைக்கு செல்போன் தெரியாது.. டிவி குறைவு.. தொழில்நுட்பகள் இல்லை. ஆனால் இன்று... இந்த சூழலில் மூன்றாம் பிறை எடுபடுமா? என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

பாத்துப் பண்ணுங்க!

English summary
Loyd Babtista, one of the bollywood producers is trying to remake Moondram Pirai in Hindi and Englush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil