»   »  2025... இந்தியா - சீனா யுத்தம்தான் 'மூன்றாவது உலகப் போர்'!

2025... இந்தியா - சீனா யுத்தம்தான் 'மூன்றாவது உலகப் போர்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆண்டு கிபி 2025... இரு பெரும் வல்லரசுகள். ஒன்று இந்தியா.. மற்றொன்று சீனா. இந்த வல்லரசுகளின் பெரும் மோதல்தான் மூன்றாம் உலகப் போராக வெடிக்கப் போகிறது.

-இப்படி ஒரு பின்னணியில், ஒரு சர்வதேச படத்துக்குரிய தரத்துடன் தயாராகிறது 'மூன்றாம் உலகப் போர்' திரைப்படம்.

சுனில்குமார், அகிலா கிஷோர், வில்சன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை சுகன் கார்த்தி இயக்கியுள்ளார். வேத் சங்கர் இசையமைத்திருக்கிறார். தேவா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சீனர்

சீனர்

சுனில்குமார் இதில் இந்திய போர் வீரனாக நடித்திருக்கிறார். சீனாவில் பிறந்து வளர்ந்து, சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்ட வில்சன், சீனா போர் படை தளபதியாக நடித்திருக்கிறார்.

கிராபிக்ஸ்

கிராபிக்ஸ்

இந்தப் படம் இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தாலும், படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காகவே 1 ஆண்டு செலவிட்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்க சென்னையிலேயே இந்த படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். எபெக்ட்ஸ் அன்ட் லாஜிக்ஸ் நிறுவனம் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளது.

2025

2025

2025-ல் போர் நடப்பது போன்ற கற்பனை கதை என்பதால், அந்த காலக்கட்டத்தின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, போர் கருவிகள் மற்றும் ராணுவ தளவாடங்களை யூகித்து இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கின்றனர்.

பெருமை

பெருமை

இயக்குநர் சுகன் கூறுகையில், "இந்தப் படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும், தான் ஒரு இந்தியன் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும்படியாக இந்த படத்தின் கதையை அமைத்திருக்கிறோம்," என்றார்.

யு சான்று

யு சான்று

இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு' சான்றிதழ் அளித்துள்ளனர். வரும் ஜனவரி 22-ந்தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

  English summary
  Moonram Ulaga Por is a new war movie based on an imagination of India - China war in 2025.
  Please Wait while comments are loading...

  Tamil Photos

  Go to : More Photos

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil