»   »  பண மோசடி... வேந்தர் மூவீஸ் மதன் மீது குவியும் புகார்கள்!

பண மோசடி... வேந்தர் மூவீஸ் மதன் மீது குவியும் புகார்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ள வேந்தர் மூவீஸ் மதன் மீது மேலும் மோசடிப் புகார்கள் வந்துள்ளன.

அவரைக் கண்டுபிடிக்கக் கோரியும் மீண்டும் புகார் மனு தரப்பட்டுள்ளது.

More cheating complaints on Vendhar movies Madhan

ஏற்கெனவே மதனின் இரு மனைவிகள் கமிஷனர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று மதனின் தாயார் தங்கம், கமிஷனர் அலுவலகத்தில் தனது மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு மீண்டும் ஒரு புகாரைத் தந்துள்ளார்.

இன்னொரு பக்கம் மதன் மீதான மோசடிப் புகார்களும் குவிந்து வருகின்றன.

எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி மதன் கோடிக்கணக்கில் மோசடி செய்துவிட்டதாக தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் இதுவரை 55 புகார் மனுக்கள் பதிவாகியுள்ளன.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மட்டும் 35 பேர் புகார் மனுக்கள் கொடுத்துள்ளனர். நேற்றும் 3 பேர் மதன் மீது மோசடி புகார் மனுக்கள் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே, மதன் உயிரோடு இருப்பது உறுதியாகியுள்ளது. அவரை டெல்லி மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளில் உள்ள பண்ணை இல்லங்களில் போலீசார் தேடி வருகின்றனர்.

English summary
Vendhar Movies Madhan's mother has again filed a petition to find out her son's hideout.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil