»   »  பயம் விட்டுப்போச்சு... வரிசையாக உருவாகும் அரசியல் படங்கள்!

பயம் விட்டுப்போச்சு... வரிசையாக உருவாகும் அரசியல் படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிங்கம் லேசாக அசர்ந்தால் எலி ஏறி விளையாடும் என்பார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியல் நிலைமை ரொம்பவே வீக்காகிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு ஸ்ட்ராங்காகி வருகிறது.

விளைவு? ஒரே ஒரு சிங்கிள் டயலாக்கில் கூட அரசியல் வந்துவிடக்கூடாது. இடம்பெற்றால் பட ரிலீஸுக்கு போராட வேண்டியிருக்குமே என்று பயந்த தமிழ் சினிமாக்காரர்கள் வரிசையாக அரசியல் படங்களாக எடுத்து வருகிறார்கள்.

More Political movies in pipeline

சாம்பிளுக்கு சில...

'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' - குக்கூ படத்தில் கண் பார்வையற்ற சுதந்திரக் கொடியாக வந்து நம் மனதைக் கவர்ந்த மாளவிகா நாயர் மீண்டும் நடிக்கும் படம். டைட்டிலேயே அரசியல் இருக்கிறது. படமும் இன்றைய அரசியலை பிரதிபலிக்குமாம்.

'அடங்காதே' - ஜிவி பிரகாஷும் சரத்குமாரும் இணையும் படம். சரத்குமார்தான் படத்தின் மெய்ன் ரோல். இரண்டு கெட்டப்களில் வருகிறார். அண்ணன் சரத்குமார் அரசியல்வாதி. தம்பி ஜிவி பிரகாஷ் வெட்டியாக சுற்றும் தம்பி.

'எதிர்க்கட்சி' - மணிரத்னம் எடுப்பதற்காக டைட்டில் பதிவு செய்து வைத்திருக்கும் படம். மணிரத்னம் படம் என்பதால் உண்மை அரசியல் சம்பவம்தான் கதையாகிறது என்கிறார்கள்.

'தெரு நாய்கள்' - விவசாயிகள் பிரச்னையையும் கார்ப்பரேட் கொள்ளையையும் பேசும் படம். முக்கியமாக நெடுவாசல் போராட்டத்தை களமாகக் கொண்ட கதை.

'ஜெட்லீ' - பன்றியை வைத்து உலக அரசியல் பேசவிருக்கிறதாம் இந்த படம்.

'தொண்டன்' - பெயரிலேயே அரசியல் இருந்தாலும் படத்தில் இல்லை என்று சொல்லும் சமுத்திரகனி அன்றாட பிரச்னையைத்தான் தொட்டிருக்கிறார் என்கிறார்.

விஜய் - அட்லீ படம் - இதில் வில்லன் எஸ்ஜே சூர்யா அரசியல்வாதியாகத் தான் வருகிறார்.

அறிமுக இயக்குநர் பிரம்மா இயக்கத்தில் முழுக்க முழுக்க அரசியல் பகடி படமாக காளி வெங்கட்டை ஹீரோவாக வைத்து ஒரு படம் உருவாகிறது.

இவைத் தவிர மேலும் சில படங்கள் அரசியலை கதைக்களமாக கொண்டு உருவாகின்றன. மாநில அரசு ஸ்ட்ராங் ஆவதற்குள் எடுத்து ரிலீஸ் பண்ணிடுங்க பிரதர்ஸ்...!

English summary
The weak political situation in Tamil Nadu is inducing Tamil film makers to make more political movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil