»   »  ஐநூறு கோடி ஹாட் கேஷ்... வகையாக சிக்கிய மதுரை புள்ளி! - Special Report 1

ஐநூறு கோடி ஹாட் கேஷ்... வகையாக சிக்கிய மதுரை புள்ளி! - Special Report 1

By: Our Special Correspondent
Subscribe to Oneindia Tamil

வெளியில் பாராட்டினாலும் கறுப்பு பண ஒழிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டது சினிமாக்காரர்கள்தான். நான்கு நாட்களாக என்ன செய்வது என்றே தெரியாமல் திணறி வருகின்றனர். வாய்விட்டுக் கூட அழ முடியவில்லை. அத்தனை சுலபத்தில் எரித்துப் போடவும் முடியவில்லை. பல திரையுலக விஐபிக்கள் வங்கியை நம்புவதில்லை. தன் வீட்டு பீரோ, சுவர் போன்றவற்றைத்தான் நம்புகிறார்கள். தினமும் அடுக்கி வைத்த கட்டுகளை கண்ணாரப் பார்த்து ஆனந்தப்படுவார்கள்.

More than 500 cr held up at Madurai VIP

எல்லாரையும் விட இந்த வலையில் சிக்கிய பெரிய திமிங்கலம் இது.... மதுரையைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளர். இவர்தான் தமிழ் சினிமாவுக்கே ஃபைனான்ஸியர். போனில் கேட்டால் ரயிலில் கோடி கோடியாய் அனுப்பி வைப்பார். அவரிடம் மட்டுமே ஐநூறு கோடி அளவுக்கு ஹாட் கேஷ் இருக்கும் என்கிறார்கள்.

வரி கட்டினால் இதுவரை கடன் கொடுத்துக்கொண்டிருந்த அவர் கடன்காரனாக மாற வாய்ப்புண்டு. அரசு போட்டிருக்கும் கடும் சட்டங்கள் அப்படி. எனவே மத்திய, மாநில அரசின் பெரும்புள்ளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்கப்பா... அவர் தான் தமிழ் சினிமாவுக்கே குளுகோஸ்!

இதே கறுப்புப் பண விவகாரத்தில் இன்னொரு ஸ்பெஷல் ரிப்போர்ட்டும் இருக்கு... அது.. விரைவில்!

English summary
Sources say that Madurai finance party is in big trouble as he owned more than Rs 500 c hot cash in hand.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil