»   »  'பியார் பிரேமா காதல்' படத்தின் போஸ்டர் மட்டுமில்ல.. நாளைக்கு நிறைய இருக்காம்..!

'பியார் பிரேமா காதல்' படத்தின் போஸ்டர் மட்டுமில்ல.. நாளைக்கு நிறைய இருக்காம்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பியார் பிரேமா காதல் படத்தின் போஸ்டருடன் நிறைய அப்டேட்ஸ்களும் வெளியாக இருப்பதாக படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் இணைந்து நடித்து வரும் படம் பியார் பிரேமா காதல்'.

More updates coming along with the motion poster: Harish kalyan

இளன் என்ற புதுமுக இயக்குநர் இந்த படத்தை இயக்கி வருகிறார். ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், பாகுபலி படத்தை வெளியிட்ட 'கே புரொடக்‌ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் ராஜராஜனும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.

காதல் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான போஸ்டர் நாளை வெளியாகிறது.

இதுகுறித்து படத்தின் ஹீரோவான ஹரிஷ் கல்யாண் தனது பக்கத்தில் டிவிட்டியுள்ளார். பியார் பிரேமா காதல் படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளியாவதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். மேலும் மோஷன் போஸ்டருன் பல அப்டேட்ஸ்களும் வர இருப்பதாக அவர் கூறியுள்ளார். உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

English summary
Actor harish Kalyan has said that pyaar prema kaadhal's motion poster is going to release tomorrow. more updates coming along with the motion poster he tweeted.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil