twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அட முதலிடத்தில் தனுஷ், சூர்யா.. கடைசி இடத்தில் விஜய் நம்ப முடிகிறதா?

    |

    சென்னை: திரை நட்சத்திரங்களின் முதல் பெரிய பலமே அவர்களது ரசிகர்கள் தான் என உறுதியாகக் கூறலாம்.

    முன்பெல்லாம் ரசிகர் மன்றங்கள் மூலம் தங்களது பலத்தை நிரூபித்து வந்தனர் நடிகர்கள்.

    ஆனால், இப்போது காலம் சமூக வலைத்தளங்களின் பக்கம் மாறிவிட்டதால் நடிகர்களின் பலமும் பலவீனமும் அவர்களது ஃபாலோயர்களை கொண்டு கணக்கிடப்படுகிறது.

    தீபாவளி..தல தீபாவளி.. இந்த ஆண்டு 'தல' தீபாவளி கொண்டாடும் திரை பிரபலங்கள்!தீபாவளி..தல தீபாவளி.. இந்த ஆண்டு 'தல' தீபாவளி கொண்டாடும் திரை பிரபலங்கள்!

    டிவிட்டர் ஃபாலோயர்கள்

    டிவிட்டர் ஃபாலோயர்கள்

    கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக நடிகர்களின் பெரிய பலமாக காணப்பட்டது அவர்களுக்கான ரசிகர் மன்றங்கள் தான். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், தனுஷ், சிம்பு என இந்த வரிசை மூன்று தலைமுறைகளாக நீடித்து வருகிறது. இவர்களில் கமல் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றினார் என்றால், அஜித் ஒருபடி மேலே சென்று தனது ரசிகர் மன்றங்களை மொத்தமாக கலைத்தே விட்டார். ஆனாலும், இப்போது ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கையில் இருந்து விலகிய இந்த பொல்லாத மனநோய், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் நடிகர்களை பின்தொடரும் ஃபாலோயர்களை கணக்கில் வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது.

    டிவிட்டரில் முதலிடம் யாருக்கு?

    டிவிட்டரில் முதலிடம் யாருக்கு?

    இந்நிலையில், சமீபத்தில் டிவிட்டரில் அதிகமான ஃபாலோயர்களை கொண்ட தென்னிந்திய நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், முதலிடத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு 13 மில்லியன் ஃபாலோயர்களுடன் முதலிடத்தில் உள்ளார். மொத்தமே 27 படங்கள் மட்டுமே நடித்துள்ள மகேஷ் பாபுவுக்கு 13 மில்லியன் ஃபாலோயர்கள் இருப்பது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. டிஜிட்டல் உலகத்தில் நடிகர்களின் படங்கள் எல்லாம் எண்ணிக்கையில் வராது என்பதற்கு இதுவே உதாரணம் என எடுத்துக்கொள்ளலாம்.

    தமிழில் தனுஷ் தான் டாப்

    தமிழில் தனுஷ் தான் டாப்

    மகேஷ் பாபுவை தொடர்ந்து 11 மில்லியன் ஃபாலோயர்களுடன் தனுஷ் இரண்டாவது இடத்தில் உள்ளார். தென்னிந்திய நடிகர்களில் தனுஷுக்கு இரண்டாம் இடம் என்றாலும், தமிழ் நடிகர்களில் அவர் தான் முன்னணியில் உள்ளார். அவரை அடுத்து 8 புள்ளி 3 மில்லியன் ஃபாலோயர்களுடன் சூர்யா மூன்றாவது இடத்தில் உள்ளார். தமிழில் இவருக்கு இரண்டாவது இடம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆச்சரியப்படுத்தும் விதமாக சூர்யாவுக்கு அடுத்து சிவகார்த்திகேயன் இந்த வரிசையில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். தமிழில் மூன்றாவது இடம் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனுக்கு மொத்தம் 7.6 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.

    கடைசி இடத்தில் விஜய்

    கடைசி இடத்தில் விஜய்

    சிவகர்த்திகேயனுக்குப் பிறகு அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் அடுத்த இரண்டு இடங்களில் காணப்படுகின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 6 மில்லியன் ஃபாலோயர்களுடன் 7வது இடத்தில் உள்ளார். தமிழில் ரஜினி சூப்பர் ஸ்டாராக பல லட்சம் ரசிகர்களுடன் ராஜநடை போட்டாலும், டிவிட்டரில் 7வது இடமே கிடைத்துள்ளது. ரஜினிக்கு 2கே கிட்ஸ் ரசிகர்கள் குறைவாக இருப்பதால் இந்த தடுமாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது. ரஜினிக்கு அடுத்து தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் காணப்படுகிறார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், விஜய் 4 மில்லியன் ஃபாலோயர்களுடன் கடைசி இடைத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கமல், சிம்பு, அஜித், கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களெல்லாம் இந்த லிஸ்டில் இல்லை என்பதும் முக்கியமானது.

    English summary
    Mahesh Babu is the most followed actor on Twitter. In Tamil, Dhanush, Suriya and Sivakarthikeyan are ahead, while Rajini and Vijay are lagging behind.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X