Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
காலியான தியேட்டர் போட்டோக்களை போட்டு அமீர்கானை பங்கம் பண்ணும் பாய்காட் ஆர்மி.. பாலிவுட் பரிதாபங்கள்!
மும்பை: அமீர்கானின் லால் சிங் சத்தா ஃபீல் குட் மூவியாக வந்திருந்தாலும், அதை பார்க்க தியேட்டர் பக்கம் யாரும் போகலையேன்னு பாலிவுட்டின் பாய்காட் ஆர்மியினர் #AamirKhan ஹாஷ்டேக்கில் அமீர்கானை பங்கம் பண்ணி வருகின்றனர்.
Recommended Video
இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான தி ஃபாரஸ்ட் கம்ப் இந்தி ரீமேக்கிற்கு பிரம்மாண்ட புரமோஷன் பண்ண நிலையிலும், ரிசல்ட் கிடைக்கவில்லை.
தலைப்பாகை எல்லாம் கட்டிக் கொண்டு அமீர்கான் சென்னைக்கு வந்து புரமோஷன் செய்த நிலையிலும், சென்னையை தவிர தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் படத்தை பார்க்க ஆளே வரவில்லையாம்.
Laal
Singh
Chaddha
Review:தி
ஃபாரஸ்ட்
கம்ப்
இந்தி
ரீமேக்
எப்படி
இருக்கு?
லால்
சிங்
சத்தா
விமர்சனம்!

படு தோல்வி
"நோ ஒன் வாட்சிங் லால் சிங் சத்தா" என அமீர்கானின் கஜினி பட மீம்களை போட்டு பாலிவுட் ரசிகர்கள் அமீர்கானை பந்தாடி வருகின்றனர். இந்து மதத்தையும் இந்தியர்களின் மனங்களையும் புண்படுத்தியதற்கு தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படத்தைத் தொடர்ந்து அமீர்கானுக்கு ரசிகர்கள் நல்ல பாடம் புகட்டி உள்ளனர் என பாய்காட் ஆர்மி ட்வீட்களை போட்டுத் தாக்கி வருகின்றது.

நிஜமாவே தியேட்டர்கள் காத்து வாங்குது
லகான், 3 இடியட்ஸ், பிகே, தங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படங்களை கொடுத்த அமீர்கானின் படத்துக்கா முதல் நாளே இப்படியொரு நிலைமை என ரசிகர்களும் ரொம்பவே ஃபீல் செய்து வருகின்றனர். முதல் நாளில் பல இடங்களில் தியேட்டர்களில் ஒரு சில ஆட்களை தவிர வேறு யாருமே வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விமர்சனம் நல்லா வந்தும்
சிறந்த நடிகர் அமீர்கான், சிறந்த படம் லால் சிங் சத்தா என பாசிட்டிவ் ஆன விமர்சனங்கள் படத்துக்கு வந்தாலும், பாலிவுட் படங்களையும் அமீர்கான் நடித்த லால் சிங் சத்தா படத்தையும் புறக்கணிக்க வேண்டும் என கிளம்பிய புரட்சியால் படத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

ரெண்டு பேர் மட்டுமே
சில தியேட்டர்களில் ஒரு சிலர் மட்டுமே வந்து அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தை பார்த்து சென்றதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. வீடியோ ஆதாரங்களுடன் வெளியிட்டு அமீர்கானை பங்கமாக பாலிவுட்டின் பாய்காட் ஆர்மியினர் கலாய்த்து வருகின்றனர். இப்படியொரு மோசமான சூழ்நிலையில், இருந்து பாலிவுட் எப்படி தப்பிக்க போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக மாறி உள்ளது.

இதுதான் வித்தியாசம்
ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படம் சூப்பர்மேன் போல கெத்தா இருக்கு, அமீர்கானின் லால் சிங் சத்தா ஃபேன்ஸி டிரெஸ் காம்பெடிஷனுக்கு வேஷம் போட்ட சூப்பர் மேன் போல இருக்கு என நெட்டிசன்கள் வெறித்தனமாக கலாய்த்து வருகின்றனர். பாலிவுட்டில் நேற்று வெளியான அமீர்கான் மற்றும் அக்ஷய் குமார் என இருவரது படங்களும் அல்ட்ரா டிசாஸ்டர் என கமெண்ட்டுகள் பறக்கின்றன.