»   »  அன்னைக்கு கோவில் வடிக்கும் லாரன்ஸ்.. கட்டுமானத்தைத் தொடங்கினார்

அன்னைக்கு கோவில் வடிக்கும் லாரன்ஸ்.. கட்டுமானத்தைத் தொடங்கினார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்னையர் தினமான இன்று தனது அம்மாவுக்கு கோயில் கட்டும் பணியை பூமி பூஜையோடு தொடங்கினார் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ்.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத் தகுந்த நடன இயக்குனரும் நடிகருமான லாரன்ஸ் சுவாமி ராகவேந்திராவின் தீவிர பக்தர் ஆவர்.இவர் சுவாமி ராகவேந்திராவுக்கு ஏற்கனவே கோயிலை அம்பத்தூர் அருகே கட்டி இருக்கிறார்.

அக்கோயிலுக்கு தினசரி பூஜைகளை இவர் செய்து வருவதால் அங்கு பக்தர்களின் கூடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் அதே கோயிலுக்கு அருகே தற்போது தனது அம்மாவுக்கு கோயில் ஒன்றை கட்ட முடிவு செய்து அதற்கான வேலைகளை தனது அம்மாவுடன் சேர்ந்து இன்று ஆரம்பித்து விட்டார்.

ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

தனது அம்மாவின் மீது மிகுந்த அன்பு கொண்ட இவர் காஞ்சனா படங்களின் தொடர் ஹிட்டால் மிகுந்த புகழ் பெற்று உள்ள இந்த நேரத்தில் தனது அம்மாவுக்கு கோயில் கட்டுவதால் மேலும் புகழ் அடைந்துள்ளார் .

உலகிலேயே முதல் முறை

உலகிலேயே முதல் முறை

உலகிலேயே முதல் முறையாக உயிரோடு வாழும் ஒருவருக்கு கோயில் கட்டுவது இதுவே முதல் முறை , இந்த வகையில் லாரன்சின் அம்மா கண்மணி மிகவும் கொடுத்து வைத்தவர்.

குஷ்புவுக்கு கோயில்

குஷ்புவுக்கு கோயில்

தமிழகத்தில் ரசிகர்கள்தான் வழக்கமாக கோவில் கட்டுவார்கள். அதுவும் நடிகைகளுக்கு. நடிகை குஷ்புவுக்கு அவரது ரசிகர்கள் அவர் மீது கொண்ட மிகுந்த அன்பால் ஏற்கனவே கோயில் கட்டி இருக்கின்றனர் .

நயன்தாரா

நயன்தாரா

அவரைத் தொடர்ந்து நடிகை நயன்தாராவுக்கு கோயில் கட்ட அவர் ரசிகர்கள் முடிவெடுத்து என்ன காரணத்தினாலோ அது நடை பெறவில்லை. நயன்தாராவும் அந்தக் கோவிலை விரும்பவில்லை.

அன்னை ஒரு ஆலயம்

அன்னை ஒரு ஆலயம்

இந்த நிலையில் ராகவேந்திரா லாரன்ஸ் இன்று தனது தாய்க்குக் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைகளை நடத்தி கட்டுமானத்தையும் தொடங்கினார்.

குடும்பத்தினர் முன்னிலையில்

குடும்பத்தினர் முன்னிலையில்

இந்த பூமி பூஜை இன்று நடந்தேறியது. அன்னையர் தினமா இன்று இந்த வேலையை நடத்தியுள்ளார் ராகவா லாரன்ஸ். இதில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

தாய்க்கு பாத பூஜை

தாய்க்கு பாத பூஜை

லாரன்ஸ் தனது தாயார் கண்மணிக்கு பாத பூஜையும் செய்தார். அப்போது அவரது சகோதரிகள், சகோதரர் உடன் இருந்தனர்.

எது எப்படியோ இதைப் பார்த்து மற்றவர்கள் அவரவர் அன்னைக்கு கோயில் கட்டாவிட்டாலும் அட்லீஸ்ட் முதியோர் இல்லத்துக்கு அனுப்பாமல் இருந்தாலே சரி தான்.

English summary
Director Raghava Lawrence started his temple works for his mother today.
Please Wait while comments are loading...