»   »  'சிவாகிட்ட வந்தா நல்லவனா இருக்கணும்.. இல்லாட்டி செத்துப் போய்ருவ'... பரபரக்கும் லாரன்ஸ் " பன்ச்"!

'சிவாகிட்ட வந்தா நல்லவனா இருக்கணும்.. இல்லாட்டி செத்துப் போய்ருவ'... பரபரக்கும் லாரன்ஸ் " பன்ச்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது நடிப்பில் உருவாகி வரும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் மோஷன் போஸ்டரை, நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருக்கிறார்.

ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் படம் மொட்ட சிவா கெட்ட சிவா. லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா2 படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் மிகவும் பிரபலமாக, படத்திற்கு தலைப்பாகவே வைத்து விட்டனர்.


இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க, அறிமுக இயக்குநர் சாய் ரமணி படத்தை இயக்கி வருகிறார்.


Motta Shiva Ketta Shiva - Official Motion Poster

Motta Shiva Ketta Shiva - Official Motion Poster


Posted by Raghava Lawrence on Saturday, March 26, 2016

தற்போதைய நிலவரப்படி இன்னும் ஒருசில பாடல்கள் மட்டுமே இப்படத்தில் முடிவடையாமல் உள்ளன.இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை இன்று ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருக்கிறார்.


மொட்டைத்தலை பாதி முடி கெட்டப்பில், போலீஸ் உடையுடன் லாரன்ஸ் நடந்து வருவது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.


மேலும் "அல்லாகிட்ட போனா அன்பா இருக்கணும், ஜீசஸ் கிட்ட போனா பாசமா இருக்கணும், ஏழுமலையான் கிட்ட போனா நேர்மையா இருக்கணும்.


இந்த சிவாகிட்ட வந்தா நல்லவனா மட்டும்தான் இருக்கணும், இல்லேன்னா செத்துப் போய்டுவ" என்று நீளமான பஞ்ச் வசனம் ஒன்றையும் லாரன்ஸ் பேசியிருக்கிறார்.


பேய்ப்படங்களை வைத்து தமிழ் சினிமாவில் ட்ரெண்டை உருவாக்கிய லாரன்ஸ், இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.


ரசிகர்கள் மத்தியில் ஆவலை உண்டாக்கி இருக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா, வருகின்ற மே மாதம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

English summary
Actor Raghava Lawrence Released Motta Siva Ketta Siva Motion Poster.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil