»   »  மொட்ட சிவா கெட்ட சிவா லாரன்சிற்கு 14 கோடி காஜலிற்கு 2 கோடி வள்ளலாக மாறிய வேந்தர் மூவிஸ்

மொட்ட சிவா கெட்ட சிவா லாரன்சிற்கு 14 கோடி காஜலிற்கு 2 கோடி வள்ளலாக மாறிய வேந்தர் மூவிஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சனா 2 படம் 100 கோடியை வசூலித்ததில் ராகவா லாரன்சின் மார்க்கெட் சர்ரென்று இமயமலை அளவிற்கு உயர்ந்து விட்டது. தற்போது வேந்தர் மூவிஸ்க்கு 2 படங்களை இயக்கி நடிக்கவிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் நாகா என 2 படங்களையும் ராகவா லாரன்சே நடித்து இயக்குகிறார், மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் லாரன்சிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இந்தப் படத்திற்காக இதுவரை வாங்காத ஒரு தொகையை சம்பளமாக பெற்று இருக்கிறார் லாரன்ஸ், லாரன்சின் ஜோடியாக நடிக்கும் காஜலிற்கும் சம்பளமாக பெரும் தொகையைக் கொடுத்து இருக்கின்றனராம்.

மொட்ட சிவா கெட்ட சிவா பற்றி இங்கு காணலாம்..

மொட்ட சிவா கெட்ட சிவா

மொட்ட சிவா கெட்ட சிவா

காஞ்சனா 2 படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற இந்த வசனத்தையே தனது அடுத்த படத்திற்கும் வைத்து விட்டார் ராகவா லாரன்ஸ், இந்தப் படத்தில் நரை முடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார் லாரன்ஸ்.

முன்னணி நடிகர்களுக்கு இணையான சம்பளம்

முன்னணி நடிகர்களுக்கு இணையான சம்பளம்

மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்காக தமிழின் முன்னணி நடிகர்களுக்கு இணையான சம்பளத்தை வாங்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். கிட்டத்தட்ட சுமார் 14 கோடியை இந்தப் படத்திற்காக சம்பளமாக பெற்று இருக்கிறார் லாரன்ஸ்.

லாரன்ஸுடன் ரொமான்ஸிற்கு 2 கோடி

லாரன்ஸுடன் ரொமான்ஸிற்கு 2 கோடி

மொட்ட சிவா கெட்ட சிவா திரைப்படத்தில் லாரன்ஸுடன் ரொமான்ஸ் செய்ய 2 கோடியை சம்பளமாக வாங்கியிருக்கிறார் காஜல் அகர்வால். விஷாலுடன் நடித்த பாயும் புலி திரைப்படத்திற்கு ஒன்றரை கோடியை சம்பளமாகக் கொடுத்த வேந்தர் மூவிஸ் தற்போது 2 கோடியை வாரி வழங்கியிருக்கின்றனர். தமிழின் முன்னணி நடிகையாக இல்லாத போதும் கூட சம்பள விஷயத்தில் மற்றவர்களை விட உயரத்தில் இருக்கிறார் காஜல் அகர்வால்.

பட்ஜெட் 24 கோடி

பட்ஜெட் 24 கோடி

படத்தின் மொத்த பட்ஜெட் 24 கோடி அதில் 14 கோடியை லாரன்ஸின் சம்பளமாகவும் 2 கோடியை காஜலின் சம்பளமாகவும் வாரி வழங்கியிருக்கிறது வேந்தர் மூவிஸ் நிறுவனம். மீதமுள்ள 8 கோடியில் மொத்தப் படத்தையும் முடிக்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

English summary
Motta Siva Ketta Siva Movie - Total Cost 24 Crores.
Please Wait while comments are loading...