»   »  மாமல்லபுரத்தில் தொடங்கியது மொட்ட சிவா கெட்ட சிவா!

மாமல்லபுரத்தில் தொடங்கியது மொட்ட சிவா கெட்ட சிவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஞ்சனா 2 விற்கு பிறகு லாரன்ஸ் நடிக்கும் அடுத்த படம் 'மொட்ட சிவா கெட்டசிவா' படப்பிடிப்பு மாமல்லபுரத்தில் தொடங்கியது. இந்தப் படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். இது சூப்பர்குட் தயாரிக்கும் 87வது படம். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பட்டாஸ் படத்தின் ரீமேக் இது. தெலுங்கில் நண்டமுரி கல்யாண் ஹீரோவாக நடித்தார்.

இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க ஜீவா நடித்த சிங்கம்புலி படத்தை இயக்கிய சாய்ரமணி இயக்குகிறார். பட்டாசு படத்திலிருந்து சில மாற்றங்களை செய்து மொட்ட சிவா கெட்ட சிவா தயாராகிறது.


Motta Siva Ketta Siva shoot begins

படத்தின் துவக்க விழா நேற்று மாமல்லபுரத்தில் ஒரு பொறியியல் கல்லூரியில் நடந்தது. ராகவா லாரன்சின் ஆஸ்தான நடிகை கோவை சரளா போலீசாக நடிக்க ராகவா லாரன்ஸ் மாணவனாக நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. சத்யராஜ் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் வேந்தர் மூவீஸ் மதன், தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, சதீஷ், இசை அமைப்பாளர் அம்ரீஷ், சண்டை இயக்குனர் சூப்பர் சுப்பராயன், நடிகர்கள் ஸ்ரீமன், ஜித்தன் ரமேஷ் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கிறது.

English summary
Raghava Lawrence's Motta Siva Ketta Siva shooting has been launched at Mamallapuram on Friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil