»   »  சிம்பு படத்தில் ‘அண்ணனை’ அறிமுகம் செய்யும் மொட்டை ராஜேந்திரன்!

சிம்பு படத்தில் ‘அண்ணனை’ அறிமுகம் செய்யும் மொட்டை ராஜேந்திரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் மொட்டை ராஜேந்திரனுடன், அவரது அண்ணனும் நடிக்க இருக்கிறார்.

நான் கடவுள் படத்தில் கொடூர வில்லனாக அறிமுகமாகி நம்மை கதிகலங்க வைத்தவர் மொட்டை ராஜேந்திரன். ஆனால், அடுத்தடுத்து அவர் நடித்த காமெடி வேடங்களால், தற்போது அவர் காமெடி வில்லனாகி விட்டார்.

Mottai Rajendran & family member in Simbu's 'AAA'

சில படங்களில் ஹீரோக்களுக்குப் பதில் ராஜேந்திரன் படத்தையே போஸ்டரில் பெரிதாக வெளியிடுகின்றனர். அந்தளவுக்கு தனக்கென ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார் ராஜேந்திரன்.

இந்நிலையில், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திலும் முக்கிய வேடத்தில் அவர் நடித்து வருகிறார்.

அதோடு இந்தப் படத்தின் மூலம் தனது அண்ணன் மாரி மணி என்பவரையும் நடிகராக அறிமுகப் படுத்துகிறார் ராஜேந்திரன்.

அவரும் இவரைப் போல் காமெடி செய்வாரா இல்லை வில்லத்தனம் செய்வாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

English summary
An interesting news is that Mottai Rajendran has been signed on to play an important role in the film and his elder brother Mari Mani is also making his debut in ‘AAA’ as confirmed by the director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil