»   »  கமலைக் கலாய்க்கும் மொட்டை ராஜேந்திரன்!

கமலைக் கலாய்க்கும் மொட்டை ராஜேந்திரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சினிமாவில் ஸ்டண்ட் நடிகராக அறிமுகமாகி, பாலாவின் நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்தவர் மொட்டை ராஜேந்திரன். ஆனால் பின்னர் காமெடியனாக நடிக்கத் தொடங்கியவர் ஒருகட்டத்தில் வடிவேலு, சந்தானம் ஆகியோர் காமெடி வேடங்களில் நடிக்காததால் முன்னணி காமெடியனாகி விட்டார்.

தற்போதும் அவர் கைவசம் ஒரு டஜன் படங்களுக்கு மேல் உள்ளன. மேலும், ஒரேமாதிரியாக இல்லாமல் படத்துக்குப் படம் வித்தியாசமான காமெடிகளைக் கொடுப்பதில் தற்போது ஆர்வம் காட்டுகிறார் மொட்டை ராஜேந்திரன்.

Mottai Rajendran mimics kamal's get-up

கேரக்டர் ரீதியாகவும், கெட்டப் ரீதியாகவும் தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டவேண்டும். ஒரே மாதிரியான காமெடியனாக நடித்தால் ரசிகர்களுக்கு போரடித்துவிடும் என நினைக்கிறார் ராஜேந்திரன்.

Mottai Rajendran mimics kamal's get-up

அந்த வகையில், 'ஒரு ராஜாவும் நான்கு கூஜாவும்' என்ற படத்தில் 'தேவர்மகன்' கமல் கெட்டப்பில் தோன்றி காமெடி செய்திருக்கிறாராம் மொட்டை ராஜேந்திரன். அந்தப் படத்தில் சிவாஜி-கமலுக்கிடையே நடக்கும் சென்டிமென்ட் காட்சிகளை இந்தப் படத்தில் மிமிக்ஸ் செய்து காமெடியாக்கியிருக்கிறார்களாம்.

குறிப்பாக, கமல் கெட்டப்பில் மட்டுமின்றி அவரை மாதிரி நடித்து பேசி ராஜேந்திரன் முயற்சி செய்திருப்பதே பெரிய காமெடியாகியிருக்கிறதாம். தனது வித்தியாசமான முயற்சி இந்தப் படத்தில் ரசிகர்களால் விரும்பப்படும் என நம்பிக்கையோடு இருக்கிறார் ராஜேந்திரன்.

English summary
Mottai Rajendran likes to do different role in each of his movies to satisfy the audience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil