»   »  "கெட்ட" ராஜேந்திரன் இப்போ ரொமான்டிக் ஹீரோ பாஸ்!

"கெட்ட" ராஜேந்திரன் இப்போ ரொமான்டிக் ஹீரோ பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வில்லனாக அறிமுகமாகி தற்போது காமெடியனாக கலக்கிக்கொண்டிருக்கும் மொட்டை ராஜேந்திரன் தற்போது அடுத்ததாக ஒரு படத்தில் ரொமான்ஸ் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

திருமதி பழனிச்சாமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மொட்டை ராஜேந்திரன் தொடர்ந்து புதிய ஆட்சி, பிதாமகன் போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார்.

2009 ம் ஆண்டு பாலாவின் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் திரைப்படம் மொட்டை ராஜேந்திரனுக்கு தமிழ் சினிமாவில் நல்ல ஒரு பிரேக்கைக் கொடுத்தது.

Mottai Rajendran now Turned Romantic Hero

ஆரம்ப காலங்களில் வில்லனாக நடித்து வந்தவர் பின்னர் ராஜா ராணி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், இவனுக்கு தண்ணில கண்டம் போன்ற படங்களின் மூலம் காமெடியனாகவும் கலக்கினார்.

தற்போது ராஜேந்திரன் அடுத்த லெவலுக்கு புரோமோஷன் ஆகிவிட்டார். ஆமாம் யானை மேல குதிரை சவாரி படத்தின் மூலம் ரொமான்ஸ் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார் ராஜேந்திரன்.

ஒரு பெண்ணை இவரும் லொள்ளு சபா புகழ் சாமிநாதனும் சேர்ந்து காதலிக்கிறார்கள் அதில் நான் கடவுள் ராஜேந்திரன் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

இந்தப் படத்தின் மூலம் நான் ரொமான்ஸ் ஹீரோவாக மாறியிருக்கிறேன் ஆனால் படத்தின் உண்மையான ஹீரோ நான் இல்லை என்று கூறியிருக்கிறார் மொட்டை ராஜேந்திரன்.

இந்தப் படத்தின் மூலம் கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இயக்குனராக உருவெடுத்திருக்கும் கருப்பையா முருகன், படத்தை தானே சொந்தமாக தயாரித்து வருகிறார்.

விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் இளம் இசையமைப்பாளர் தாஜ்நூர்.

ரொமான்ஸ் ஹீரோன்னு சொன்னாங்க...

English summary
Naan Kadavul Fame Mottai Rajendran Now Turned Hero Level, Mottai Rajendran's Next Movie Yaanai Mel Kudhirai Savaari He is acting a Romantic Hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil