»   »  பாட்டிலும், கையுமாக மொடாக் குடிகாரனான மொட்டை ராஜேந்திரன்

பாட்டிலும், கையுமாக மொடாக் குடிகாரனான மொட்டை ராஜேந்திரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கரதம் படத்தில் மொடாக் குடிகாரனாக நடித்துள்ளாராம் மொட்டை ராஜேந்திரன்.

புதுமுகங்களான வெற்றி, அதிதி கிருஷ்ணாவை வைத்து பாலமுருகன் இயக்கியுள்ள படம் தங்கரதம். டெம்போவை வைத்து வியாபாரம் செய்யும் இருவரைப் பற்றிய படம் இது.

இதில் மொட்டை ராஜேந்திரன், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மொட்டை ராஜேந்திரன்

மொட்டை ராஜேந்திரன்

தங்கரதம் படத்தில் மொட்டை ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறாராம். ஹீரோ ரேஞ்சுக்கு அவருக்கு தனியா இன்ட்ரோ பாடல் எல்லாம் வைத்துள்ளாராம் இயக்குனர்.

குடிகாரன்

குடிகாரன்

மொட்டை ராஜேந்திரனின் கதாபாத்திரத்தின் பெயர் மிஸ்டர் குடிமகனாம். எப்பொழுது பார்த்தாலும் மது பாட்டிலும், கையுமாக தான் படத்தில் வருவாராம்.

தங்கரதம்

தங்கரதம்

ஹீரோ வெற்றியின் டெம்போவின் பெயர் தான் தங்கரதம். வில்லன் சவுந்தர ராஜாவும் டெம்போ வைத்திருப்பாராம். இவர்களுக்கு இடையே நடக்கும் தொழில் போட்டியை வைத்து கதை நகர்கிறதாம்.

வெற்றி

வெற்றி

ஹீரோயின் அதிதியுடன் முத்தக் காட்சி வைக்குமாறு வெற்றி இயக்குனரிடம் கெஞ்சியும் அவர் முடியாது என்று மறுத்துவிட்டாராம். இதை இயக்குனர் பாலமுருகனே தெரிவித்துள்ளார்.

English summary
Mottai Rajendran has turned drunkard for his upcoming movie titled Thangaratham being directed by Balamurugan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil