»   »  மோட்டு பட்லு... சிங்கம் என்னிக்கும் சிங்கம்தான்!

மோட்டு பட்லு... சிங்கம் என்னிக்கும் சிங்கம்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கார்ட்டூன் சேனல் பார்க்கும் குழந்தைகளுக்கு மோட்டு பட்லுவுக்கு அறிமுகம் தேவையில்லை. சமோசா பிரியன் மோட்டு குண்டன், பட்லு ஒல்லியாக இருப்பான். இருவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் அதகளமாக இருக்கும். அந்த மோட்டு பட்லுவை வைத்து ஒரு ஜங்கிள் புக் எடுத்திருக்கிறார்கள்.

கதை கிட்டத்தட்ட பில்லா படத்தோட கதை தான். சர்க்கஸில் இருக்கும் சைவ சிங்கம் ஒன்று அங்கிருந்து தப்பித்து மோட்டு பட்லு கையில் சேர்கிறது. அதனைக் கொண்டுபோய் காட்டில் சேர்க்க முயற்சிக்கிறார்கள் மோட்டுவும் பட்லுவும். அதே காட்டில் இருக்கும் சிங்க ராஜா வேட்டைக்காரர்களோடு போரிட்டு வீரமரணம் அடைகிறார். அந்த ராஜா சிங்கத்தின் இடத்தில் இந்த சைவ சிங்கத்தை வைத்து போரை நடத்தி வேட்டைக்காரர்களை காட்டை விட்டு விரட்டி காட்டை காப்பாற்றுகிறார்கள் மோட்டுவும் பட்லுவும்.

Mottu Patlu releasing today

கார்ட்டூன் படம்தானே என்று அலட்சியமாக உட்கார்ந்தால் நம்மையும் அறியாமல் படத்துக்குள் நம்மை இழுத்து செல்கிறார்கள் மோட்டுவும் பட்லுவும். சைவ சிங்கம் பட்டு என்று நினைத்து ஒரிஜினல் சிங்கத்தின் காதை பிடித்து மோட்டு செய்யும் அட்டகாசங்களும், சர்க்கஸில் எலியை பார்த்து அலறி ஓடும் பட்டுவும் வயிறு குலுங்க வைக்கின்றன.

'சிங்கம் என்னிக்கும் சிங்கம் தான். அது காட்டுல இருந்தாலும் சரி, சர்க்கஸில் இருந்தாலும் சரி' டயலாக்தான் கதையின் அவுட்லைன். இதுபோன்ற தமிழ் டயலாக்குகளும் மோட்டு பட்லுவின் பாடல் தமிழாக்கமும் இனி குழந்தைகளின் ரைம்ஸில் சேரும்.

குழந்தைகளுக்கானது என்றாலும் அதிலும் ஒரு எமோஷனல், ஆக்‌ஷன், அட்வெஞ்சர் என ஒரு விறுவிறுப்பான நெகிழ்வான படத்துக்கான எல்லாமும் இருக்கிறது மோட்டு பட்லுவிடம். இன்னும் கொஞ்சம் காமெடியை சேர்த்திருக்கலாம்.

இந்த வீக் எண்டுக்கான செம ஜாலி படம்!

English summary
Today's release Mottu Patlu movie is gives you 100 percent entertainment to family & Kids.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil