»   »  சினிமாவில் மிரட்ட வரும் நாகினி!

சினிமாவில் மிரட்ட வரும் நாகினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'நாகினி' சிரீயல் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த சீரியலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்த்தார்கள்.

சீரியலை விரும்பாத இளைஞர்கள் கூட இந்த சீரியலில் நாகினியாக நடித்த மௌனி ராய்க்காக டி.வி முன்பு தவம் கிடந்தனர். நாகினி சீரியலில் நாகினி பாம்பாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் மௌனி ராய். தற்போது இவர் பாலிவுட்டில் ஹீரோயினாக களமிறங்கி உள்ளார்.

 Mouni roy plays a villain role in bollywood

முதல் படமாக அக்‌ஷய் குமாரின் 'கோல்டு' படத்தில் நடிக்கிறார். சினிமாவிலும் மௌனி ராயை கண்டு ரசிக்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில், அடுத்தபடியாக அயன் முகர்ஜி இயக்கும் 'பிரம்மாஸ்திரா' என்ற படத்தில் நடிக்கிறார்.

ரன்பீர் கபூர், அலியா பட் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க மௌனி ராய் இந்தப் படத்தில் வில்லியாக நடிக்கிறார். அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

English summary
The popular TV serial 'Nagini' received warm welcome by fans. Mauni Roy is famous for played Nagini role in Nagini serial. Now she is a heroine in Bollywood. Mouni roy plays first film in Akshay Kumar's 'Gold'. She will played as villain role in next film 'Brahmastra'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil