»   »  கார், பைக் ரேஸை வைத்து உருவாகும் 'ஜெயிக்கப் போவது யாரு?'

கார், பைக் ரேஸை வைத்து உருவாகும் 'ஜெயிக்கப் போவது யாரு?'

Posted By:
Subscribe to Oneindia Tamil

கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவை கேட்க, பார்க்க சுவாரஸ்யமாக இருந்தாலும், இவற்றால் ஏற்படும் உயிர்பலி மிகக் கொடுமையானது.

இந்த ரேஸைப் பின்னணியாக வைத்து ஒரு படம் உருவாகிறது. தலைப்பு ஜெயிக்கப் போவது யாரு.

சீனிவாசன்

சீனிவாசன்

அதிசய உலகம் படத்தை தயாரித்த டிட்டு புரொடக்ஷன்ஸ் ஆர்.பானுசித்ராதான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்த படத்தில் சீனிவாசன் காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடிக்கிறார் (பவர் ஸ்டார் என்ற பட்டத்தைத் தூக்கிவிட்டால் ரொம்ப புவர் ஸ்டாராகத்தான் தெரிகிறார்).

பாண்டியராஜன்

பாண்டியராஜன்

முக்கிய வேடத்தில் பாண்டியராஜன் நடிக்கிறார். நாயகனாக ஷக்திஸ்காட்டும், நாயகியாக வந்தனாவும் அறிமுகமாகிறார்கள்.
மற்றும் சைதன்யா, அத்விக், ஷ்யாம் சுந்தர், சதீஷ்ராமகிருஷ்ணன், கோட்டி, வெங்கட், சோனல் பானர்ஜி, சையத் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஷக்தி ஸ்காட்

ஷக்தி ஸ்காட்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங், ஒளிப்பதிவு செய்து இயக்கி இருப்பவர் ஷக்திஸ்காட். ஆண்டன் ஜெப்ரீனுன் இணைந்து இசையும் அமைக்கிறார் ஷக்திஸ்காட்.

நகைச்சுவையாக

நகைச்சுவையாக

இந்தப் படம் குறித்து ஷக்தி ஸ்காட் கூறுகையில், "இன்று அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டாலும் திருட்டுத் தனமாக நடந்து கொண்டிருப்பது கார்ரேஸ், பைக்ரேஸ் இதில் எத்தனையோ பேர் பலியாகிக் கொண்டிருகிறார்கள். ஆனால் இந்த ஜெயிக்கப் போவது யாரு படத்தில் இந்த ரேஸ் விஷயத்தை முழுக்க முழுக்க காமெடியாகச் சொல்லி இருக்கிறோம். ஐந்து குரூப்பை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டு காமெடியில் கலக்கி இருகிறார்கள். மூன்று கார்கள், ஒரு ஆட்டோ, ஒரு ஜீப் இதை வைத்து சீரியஸான விஷயத்தை காமெடியாகச் சொல்லி இருக்கிறோம்.
பெங்களூர், திண்டிவனம், ஆற்காடு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்," என்றார்.

Read more about: tamil cinema, race, ரேஸ்
English summary
Jeyikka Povathu Yaaru is a new movie directed by Shakthi Scott with the background of Bike, Car races.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil