செஞ்சுட்டா போச்சு...வாரிசு செகண்ட் , 3வது லுக் எப்போ...அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர்

சென்னை : விஜய்யின் வாரிசு படத்தின் செகண்ட் மற்றும் மூன்றாவது லுக் எப்போ வெளியிடுவீங்க என கேட்ட ரசிகர்களுக்கு அசத்தல் அப்டேட்டை வெளியிட்டுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம்.

விஜய்யின் 48 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை வேறலெவலில் கொண்டாட ரசிகர்கள், விஜய் நடிக்கும் படங்களின் படக்குழுவினர் ஆகியோர் பிளான் செய்து வருகின்றனர்.

தளபதி 66, தளபதி 67 படங்களின் அப்டேட்டை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வமாக காத்திருக்கிறார்கள். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு முதல் ஆளாக தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை, டைட்டிலுடன் வெளியிட்டுள்ளது தளபதி 66 படத்தை தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ்.

தளபதி 66 டைட்டில் வாரிசு

தளபதி 66 டைட்டில் வாரிசு

தளபதி 66 படத்திற்கு வாரிசு தி பாஸ் ரிட்டர்ன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செம மாஸாக, ஸ்டைல் லுக்கில் அமர்ந்திருக்கும் விஜய்யின் போஸ்டருடன் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. டைட்டிலை வைத்து படத்தின் கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் பெரிய ஆராய்ச்சியே நடத்தி வருகின்றனர்.

Recommended Video

Varisu Second Look - கொண்டாத்தில் ரசிகர்கள் |Thalapathi Vijay *Kollywood | Filmibeat tamil
டிரெண்டான ஃபர்ஸ்ட் லுக்

டிரெண்டான ஃபர்ஸ்ட் லுக்

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. இந்த போஸ்டர் வெளியிடப்பட்ட 20 நிமிடங்களில் 20 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. He is returning என்ற வசனத்துடன் வெளியிட இந்த போஸ்டரை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

நாளைக்கு எதுவும் இல்லையா

நாளைக்கு எதுவும் இல்லையா

நாளை தான் விஜய்யின் பிறந்தநாள். ஆனால் தளபதி 66 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் ஆகியவற்றை படக்குழு இன்றே வெளியிட்டது விட்டது. இதனால் விஜய்யின் பிறந்தநாளான நாளை என்ன பண்ண போகிறார்கள். எதுவும் கிடையாதா, செகண்ட் லுக் மற்றும் மூன்றாவது லுக் எப்போ வெளியிட போகிறார்கள் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

எல்லாமே சும்மா தானா

எல்லாமே சும்மா தானா

தளபதி 66 படத்தின் செகண்ட் லுக் ஜுன் 21 ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக கூட ஒரு தகவல் வெளியானது. செகண்ட் லுக்குடன் தான் படத்தின் டைட்டில் வெளியாகும் என்று கூட சொல்லப்பட்டது. ஆனால் ஃபர்ஸ்ட்லுக்குடன் தளபதி 66 படத்தின் டைட்டிலை வெளியிட்டு விட்டார்கள். அப்போ நாளைக்கு என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

செஞ்சுட்டா போச்சு

செஞ்சுட்டா போச்சு


ரசிகர்களின் இந்த கேள்விக்கு பதிலளித்து ட்வீட் போட்டுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ். அதில், செகண்ட் லுக்கா? செஞ்சுட்டா போச்சு. வாரிசு செகண்ட் லுக்கை நாளை 11.44 மணிக்கு ரிலீஸ் செய்ய உள்ளோம். வாரிசு மூன்றாவது லுக்கை 17.02 மணிக்கு நாளை வெளியிட உள்ளோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X