வருகிறான் சோழன்...இந்த வாரம் பொன்னியின் செல்வன் டீசர் வருதா... வெளியானது க்ளிம்ப்ஸ்

சென்னை : மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கையில் புதிய க்ளிம்ப்ஸ் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளனர் தயாரிப்பாளர்கள்.

Recommended Video

Ponniyin Selvan | பின் வாங்குற பேச்சுக்கே இடமில்லை *Kollywood | Filmibeat Tamil

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை , அதே பெயரில் படமாக இயக்கி உள்ளார் மணிரத்னம். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவித்து விட்டார்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியன் படமாக ரிலீஸ் செய்யவதற்கு பிரம்மாண்ட வேலைகள் நடத்தப்பட்டு வருகிறது. கோலிவுட்டில் அதிக செலவில் எடுக்கப்பட்டுள்ள முதல் படம் இது தான்.

தள்ளிப்போன டீசர் ரிலீஸ்

தள்ளிப்போன டீசர் ரிலீஸ்

இந்திய திரையுலகை சேர்ந்த மெகா ஸ்டார்கள் நடித்துள்ள இந்த படத்தின் முதல் பாகம் தான் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதி அல்லது 2023 ம் ஆண்டில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் ஜுலை 8 ம் தேதி வெளியிடப்படும் என தகவல்கள் பரவின. அதோடு டீசர் வெளியீட்டு விழா தஞ்சையில் நடத்தப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

பாகுபலிக்கு டஃப் கொடுக்குமா

பாகுபலிக்கு டஃப் கொடுக்குமா

இந்த விழாவிற்காக படத்தில் நடித்த நடிகர், நடிகைகளிடம் கால்ஷீட்களும் பெறப்பட்டுள்ளது. டீசர் வெளியீட்டை தொடர்ந்து, தஞ்சையில் பிரஸ்மீட் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது. பாகுபலி படத்திற்கே டஃப் கொடுக்கும், வசுல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் கடைசி நிமிடத்தில் தள்ளிவைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

க்ளிம்ப்ஸ் வெளியிட்ட மெட்ராஸ் டாக்கீஸ்

க்ளிம்ப்ஸ் வெளியிட்ட மெட்ராஸ் டாக்கீஸ்

கிராஃபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் தான் டீசர் ரிலீஸ் தள்ளி போவதாக சொல்லப்பட்டது. இதனால் டீசர் இம்மாத இறுதியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், வருகிறான் சோழன் என்ற கேப்ஷனுடன் க்ளிம்ப்ஸ் ஒன்றை, பொன்னியின்செல்வன் தயாரிப்பாளர்களில் ஒருவரான மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வெளியிட்டுள்ளது. சாகசம் நிறைந்த வாரத்திற்கு தயாராகுங்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி ஆர்வத்தை துண்டுறீங்களே

இப்படி ஆர்வத்தை துண்டுறீங்களே

போர்கள பேக்கிரவுண்டில், சோழர்கள் கொடி பறப்பது போன்று இந்த க்ளிம்ப்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களின் ஆர்வத்தை துண்டி உள்ளது. இதனால் முதலில் சொல்லப்பட்டதை போல் ஜுலை முதல் வாரத்தில் தான் டீசர் ரிலீஸ் நடத்தப்பட உள்ளதோ என கேட்டு வருகின்றனர். ஆனால் டீசர் ரிலீசா, வேறு ஏதாவது அப்டேட்டா என தெரியாமல் குழப்பமைடந்துள்ளனர்.

என்ன அப்டேட்ங்க இது

என்ன அப்டேட்ங்க இது

இதுவரை டீசர் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு எதையும் பொன்னியின் செல்வன் டீம் வெளியிடவில்லை. இதனால் என்ன அப்டேட் வரப் போகிறது என ஆர்வமாக கேட்டு வருகின்றனர். இப்போது தான் கமல் விக்ரம் படத்தை வெளியிட்டு பான் வேர்ல்டு ஹிட் கொடுத்துள்ளார். சூட்டோடு சுடாக பொன்னியின் செல்வனையும் களமிறக்குங்க என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X