Don't Miss!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Technology
Washing Machine இருக்கிறதா? அப்போ இந்த 7 தவறுகளை செய்யாதீங்க.! ஏனெனில்?
- News
வைகோ பரந்த மனசை பார்த்தீங்களா.. ஊருக்காக 5 ஏக்கர் நிலத்தை விட்டுக்கொடுத்தாராம்.. துரை வைகோ பெருமிதம்
- Sports
கோலியை சிக்க நினைத்த இஷான் கிஷன்.. கவனக்குறைவால் நிகழ்ந்த தவறு.. தொடர்ந்து வீணாகும் வாய்ப்பு
- Lifestyle
தம்பதிகளே! நீங்க உடலுறவு கொள்ளும்போது இந்த அறிகுறிகள் இருந்தா.. நீங்க ரொம்ப பாவமாம்...ஏன் தெரியுமா?
- Automobiles
இந்த விஷயத்திலும் செம்ம பொருத்தம்.. இளம் ஜோடி கே.எல் ராகுல் & அதியாவின் மயக்க வைக்கும் லக்சரி கார் கலெக்ஷன்ஸ்
- Finance
கடன் நெருக்கடி.. சீனா பில்லியனர் Hui ka-வின் சொத்துமதிப்பு 93% சரிவு..!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
சிவகார்த்திகேயனின் மாவீரன் டீம்...முழு விபரங்களை வெளியிட்ட படக்குழு
சென்னை : மண்டேலா படத்தை இயக்கிய டைரக்டர் மடோனா அஸ்வினின் அடுத்த படத்திற்கு மாவீரன் என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் லீட் ரோலில் நடிக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் மற்றொரு படமான பிரின்ஸ் படத்தின் இணை தயாரிப்பாளரான அருண் விஸ்வா தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மாவீரன் படத்தின் ஷுட்டிங் எளிமையான பூஜையுடன் நேற்று சென்னையில் துவங்கியது. இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றும் மற்ற கலைஞர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், மாவீரன் படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லீட் ரோலில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பரத் சங்கர் இசையமைக்கிறார்.ஒளிப்பதிவு இயக்குனர் - விது அயன்னா, எடிட்டர் - பிலோமின் ராஜ், கலை இயக்குனர் - குமார் கங்கப்பன், ஸ்டண்ட் இயக்குனர் - யானிக் பென், ஒலி வடிவமைப்பு - சுரேன் G, எஸ் அழகியகூத்தன், ஒலிக்கலவை - சுரேன் G, ஆடை வடிவமைப்பாளர் - தினேஷ் மனோகரன், ஒப்பனை கலைஞர் - சையத் மாலிக் S, உடைகள் - நாகு கவனிக்க உள்ளனர்.
இந்நிலையில் மற்றொரு லேட்டஸ்ட் தகவலாக பிரபல டைரக்டர் மிஸ்கின் மாவீரன் படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மிஸ்கின் இணைய உள்ளார். இதனை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.திறமையான டைரக்டர் என பெயர் வாங்கிய மிஸ்கின், பல படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார்.
மிஸ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதற்கு முன் சூப்பர் டீலக்ஸ், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், ஜி.வி.பிரகாஷின் பேச்சுலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் மிஸ்கின். தற்போது சிவகார்த்திகேயன் படத்திலும் இவர் இணைந்துள்ளதால், இவர் என்ன ரோலில் நடிக்கிறார் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்க துவங்கி விட்டனர்.
ஒரு வேளை மிஸ்கின் தான் மாவீரன் படத்தின் வில்லனோ என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர்.ஆனால் டீசர் படி பார்த்தால் இது சூப்பர் ஷீரோ படம் போல் உள்ளதே. அப்படியானா மிஸ்கினுக்கு என்ன ரோல் என ரசிகர்கள் யூகங்களை அடுக்கி வருகின்றனர்.
30வது
பிறந்தநாளை
காதலருடன்
துபாயில்
கொண்டாடிய
கியாரா
அத்வானி..
மாவீரன்
படத்தில்
நடிக்கிறாரா?