»   »  ஆவிகளும் காதலிக்குதாம்.. டூயட் பாடுதாம்... என்னமா கத வுடறானுங்க!

ஆவிகளும் காதலிக்குதாம்.. டூயட் பாடுதாம்... என்னமா கத வுடறானுங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மனுஷன் பேய காதலிச்சுப் பாத்துட்டோம்... பேய் மனுசனக் காதலிச்சும் பாத்துட்டோம்... இப்போ ஆவியும் ஆவியும் காதலிச்சு டூயட் பாடுதாம் ஒரு படத்துல.

படத்துக்கு பொருத்தமா ஒரு தலைப்பு வச்சிருக்காங்க... அது 'என்னமா கத வுடறானுங்க!'

இந்தப் படத்தை அலெக்ஸ் கிரியேஷன்ஸ் தயாரிக்க, ஃபிரான்ஸிஸ் ராஜ் இயக்குகிறார்.

Movie on romance between Ghosts!

காதல், அதனால் உண்டாகும் சோகம், சந்தோஷம், வலி, கண்ணீர் இவை யாவும் உயிரோடிருக்கும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஆவிகளுக்கும் இருக்கிறது என்பதைச் சொல்கிறதாம் இந்தப் படம்.

தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை வந்த அனைத்து பேய் படங்களைக் காட்டிலும் வித்தியாசமான திரைக்கதையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரான்சிஸ் ராஜ் கற்பூரம் அடிக்காத குறையாக உறுதி கூறுகிறார்.

Movie on romance between Ghosts!

"கோட்டை மேடு என்ற கிராமத்தில் இந்தப் படத்துக்காக நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஷூட்டிங் நடத்தினோம். அப்போது டெக்னிக்கல் உதவியுடன் வந்த பேயைப் பார்த்து டெக்னீஷியன்களே மிரண்டு போனார்களாம். அந்த கிராமத்து மக்கள் பயந்து போய் சாமிக்கு பூஜை பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்," என்கிறார் இயக்குநர்.

படத்தின் நாயகனாக ஆர்வி நடிக்கிறார். நாயகிகளாக ஷாலு மற்றும் அலிஷா சோப்ரா நடிக்கின்றனர். ரவி மரியா, மயில்சாமி உள்பட பலரும் நடிக்கின்றனர்.

ரவி விஜய் ஆனந்த் இசையமைக்கிறார்.


English summary
Ennama katha vudranunga is a movie on romance between Ghosts directed by Francis Raj.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil