»   »  மிஸ்டர் பீனையும் விட்டு வைக்காத கபாலி..!

மிஸ்டர் பீனையும் விட்டு வைக்காத கபாலி..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படமும் ரிலீசாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருகிறது. ஆனால், இன்னமும் அப்படத்தின் டிரெய்லருக்கு மவுசு குறையவில்லை.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படத்தின் டிரெய்லர் கடந்த மே மாதம் ரிலீசானது. ரிலீசான சில மணி நேரங்களிலேயே அதிகம் பேர் பார்த்து சாதனையும் புரிந்தது.

அதில் ரஜினி கூறும் டயலாக், நெருப்புடா, மகிழ்ச்சி போன்ற வார்த்தைகள் வைரலானது. தமிழ் தெரியாதவர்கள் வாயில் கூட சுலபமாக புகுந்தது இவை.

கபாலிடா...

கபாலிடா...

எனவே, கபாலி டீசரை எடிட் செய்து பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கின. அவற்றில் சில காமெடி ரகம், சில சீரியஸ்.

திமுக வீடியோ...

கபாலியின் புகழை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள கட்சிகளும் தவறவில்லை. கபாலி டீசர் தீமில் வீடியோ திமுகவைப் புகழ்ந்து ஒரு வீடியோ வெளியாகி வைரலானது.

கேரளாவிலும்...

இதேபோல், கேரளாவிலும் உம்மன்சாண்டியை வைத்து கபாலிடா வீடியோ ஒன்று வெளியானது. இதுவும் இணையத்தில் வேகமாகப் பரவியது.

வசூல் மழை...

வசூல் மழை...

தற்போது கபாலி படம் ரிலீசாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலிலும் புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன.

மிஸ்டர். பீன்...

மிஸ்டர். பீன்...

இந்நிலையில் தற்போது கபாலி டீசரை வைத்து புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இதில் பிரபல காமெடி நடிகர் மிஸ்டர் பீனின் காட்சிகள் கச்சிதமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

கச்சிதம்...

கபாலி பட டிரைய்லரில் மிஸ்டர் பீனின் காட்சிகளைச் சேர்த்து இது போன்று ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் உள்ளன. ஆனால், அவற்றில் இது வித்தியாசமாகவும், பொருத்தமாகவும் இருப்பதால் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த வீடியோவை நீங்களும் பார்த்து ரசியுங்கள்...!

English summary
A video of mr.Bean in kabali teaser is viral now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil