»   »  8 தோட்டாக்கள்... இயக்குநருக்கு தங்கச் சங்கிலி அணிவித்த நடிகர் எம்எஸ் பாஸ்கர்!

8 தோட்டாக்கள்... இயக்குநருக்கு தங்கச் சங்கிலி அணிவித்த நடிகர் எம்எஸ் பாஸ்கர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் வெளியான '8 தோட்டாக்கள்' படத்தை இயக்கியவர் இயக்குநர் ஸ்ரீகணேஷ். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் நடித்திருந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் கதாப்பத்திரம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. திரைப்பட நடிகர்கள், இயக்குனராகள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என பலர் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களை நேரிலும், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டும் பாராட்டி வருகின்றனர்.


MS Baskar presents gold chain to his director

இதனால், உற்சாகம் அடைந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், தன்னுடைய கதாப்பாத்திரத்தின் நடிப்பை வெளிக் கொண்டுவர காரணமாக இருந்த இயக்குநர் ஸ்ரீகணேஷை தனது வீட்டுக்கு அழைத்தார்.


அவருக்கு ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசளித்து வாழ்த்தினார். தனக்கு இப்படி ஒரு பிரமாதமான வேடம் கொடுத்ததற்கு நன்றியும் தெரிவித்தார்.


பட விமர்சனங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளத்தான் எம்.எஸ்.பாஸ்கர் அழைத்திருக்கிறார் என்று நினைத்து வந்த இயக்குநர் ஸ்ரீகணேஷ், திடீர் என அவர் தங்க சங்கிலி பரிசளித்து பாராட்டியதில் நெகிழ்ந்து போனார்.

English summary
Actor MS Baskar has presented a gold Chain to 8 Thottakkal director Sri Ganesh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil