»   »  மகள் கொடுத்த நியூ இயர் சர்ப்ரைஸ்... கலங்கிப்போன எம்.எஸ்.பாஸ்கர்!

மகள் கொடுத்த நியூ இயர் சர்ப்ரைஸ்... கலங்கிப்போன எம்.எஸ்.பாஸ்கர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கண்கலங்கும் அளவிற்கு மகளால் சர்ப்ரைசான எம்.எஸ் பாஸ்கர்- வீடியோ

சென்னை : தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி குணச்சித்திர வேடத்தில் அசத்தி வரும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். இவர் தற்போது பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளிவந்த '8 தோட்டாக்கள்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அசத்தினார். இந்தப் படத்தில்தான் இவருக்கு கனமான வேடம் கொடுத்ததாக பலரும் பாராட்டியிருந்தனர்.

MS bhaskar's daughter gives surprise to her father

இவர் நடிகர் என்பதைத் தாண்டி பிரபலமான டப்பிங் கலைஞரும் கூட. தமிழில் டப் செய்யப்பட்ட பல ஹாலிவுட் படங்களுக்கு இவர் குரல் கொடுத்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஷ்வர்யாவும் தற்போது தமிழில் வெளியாகும் சில படங்களுக்கு தனது டப்பிங் செய்து வருகிறார்.

இந்நிலையில் தனது அப்பாவுக்கு நியூ இயர் சர்ப்ரைஸ் பரிசு கொடுத்து அசத்தியுள்ளார் ஐஷ்வர்யா. சர்ப்ரைஸாக கொடுக்கவேண்டும் என்பதற்காக, பெசன்ட் நகர் பீச்சில் அவரது கண்ணில் துணியைக் கட்டி அழைத்து வந்து ராயல் என்பீல்ட் புல்லட் வண்டியை பரிசாகக் கொடுத்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத எம்.எஸ்.பாஸ்கர் தனது மகளை கட்டிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியும் அப்போது உடன் இருந்தார். ஐஷ்வர்யா தன் தந்தைக்கு கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நெஞ்சைத் தொட்டுவிட்டது என பலரும் நெகிழ்ந்துபோய் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். எம்.எஸ்.பாஸ்கருக்கும், அவரது மகளுக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

English summary
Actor MS Bhaskar, who is a comedian in Tamil cinema. He is currently acting in important roles in many films. His daughter Aishwarya bhsakar is currently dubbing for Tamil films. Aishwarya has surprised her father by the gift of Royal Enfield bullet yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X