»   »  தல ரொம்ப 'ஷை', சாக்ஷி நிறைய பேசுவார்: சொல்கிறார் டோணியின் ரீல் காதலி

தல ரொம்ப 'ஷை', சாக்ஷி நிறைய பேசுவார்: சொல்கிறார் டோணியின் ரீல் காதலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கிரிக்கெட் வீரர் டோணி மிகவும் கூச்ச சுபாவமாக இருக்கிறார், அதனால் அவர் தனது வாழ்க்கை வரலாற்று படத்தை பார்த்துவிட்டு எதுவும் கூறவில்லை என நடிகை திஷா பதானி தெரிவித்துள்ளார்.

MS Dhoni: The Untold Story- Disha Patani reveals the reaction of Dhoni and wife Sakshi on biopic

டோணியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரியில் நடித்தவர் திஷா பதானி. சாலை விபத்தில் பலியான டோணியின் காதலி பிரியங்கா ஜாவின் கதாபாத்திரத்தில் நடித்தவர் திஷா.

படத்தை பார்த்த பிறகு டோணி மற்றும் அவரின் மனைவி சாக்ஷி என்ன கூறினார்கள் என திஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,

டோணிக்கு மிகவும் கூச்ச சுபாவம். அதனால் அவர் ஒன்றும் கூறவில்லை. அவரது மனைவி சாக்ஷி நிறைய பேசுவார். அவருக்கு என் நடிப்பும், என்னையும் பிடித்திருந்தது. டோணிக்கும் என் நடிப்பு பிடித்திருந்தது என நம்புகிறேன் என்றார்.

டோணி படம் வெளியான 2 வாரங்களில் உலக அளவில் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: dhoni, biopic, டோணி
English summary
Actor Disha Patani is one of the few actors who made her entry in Bollywood industry with such a performance oriented film, MS Dhoni: The Untold Story. Dhoni might have reserved his comments about newcomer’s performance in his biopic, but the actress reveals the Indian captain’s wife Sakshi was forthcoming in praising her work.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil