»   »  ஆஸ்கர் ரேஸில் டோணி

ஆஸ்கர் ரேஸில் டோணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்று படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாறு எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் படமாக வெளியானது. சுஷாந்த் சிங் ரஜ்புட் டோணியாக நடித்திருந்தார்.

'MS Dhoni: The Untold Story' , 'Sarbjit' make it to Oscars list

படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் 2016ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு 336 படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் டோணி படமும் ஒன்று.

டோணி தவிர ஐஸ்வர்யா ராய் நடித்த சரப்ஜித் படமும் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்திய-அமெரிக்க இயக்குனரான மீரா நாயரின் க்வீன் ஆப் கத்வே படமும் ஆஸ்கர் ரேஸில் உள்ளது.

இந்த படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற லுபிதா நியாங்கோ நடித்துள்ளார். உகாண்டாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Indian biopics 'MS Dhoni: The Untold Story' and 'Sarbjit' have made it to the long list of 336 feature films eligible for the Oscars. The Academy of Motion Picture Arts and Sciences released the list of films in contention for the best picture Oscar on Wednesday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil