»   »  2 வாரத்தில் ரூ. 200 சி: கிரிக்கெட்டை போன்று பாக்ஸ் ஆபீஸிலும் டோணி புதிய சாதனை

2 வாரத்தில் ரூ. 200 சி: கிரிக்கெட்டை போன்று பாக்ஸ் ஆபீஸிலும் டோணி புதிய சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி படம் உலக அளவில் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளது.

கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாறு எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் படமாக்கப்பட்டு கடந்த மாதம் 30ம் தேதி வெளியானது. டோணியாக சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்துள்ளார்.

படம் ரிலீஸான அன்றே ரூ. 21.30 கோடி வசூல் செய்தது.

ரூ.200 கோடி

ரூ.200 கோடி

டோணியின் வாழ்க்கை வரலாற்று படம் வெளியான இரண்டு வாரங்களில் உலக அளவில் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.175.7 கோடியும், வெளிநாடுகளில் ரூ.29 கோடியும் வசூலித்துள்ளது.

டோணி

டோணி

இந்திய சினிமா வரலாற்றிலேயே வாழ்க்கை வரலாற்று படம் ஒன்று இவ்வளவு வசூல் செய்துள்ளது இதுவே முதல் முறை என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளது.

வார நாட்கள்

வார நாட்கள்

வார நாட்களில் கூட டோணி படத்தின் வசூல் நன்றாக உள்ளது. கடந்த புதன்கிழமை ரூ. 2.30 கோடியும், வியாழக்கிழமை ரூ. 2.27 கோடியும் வசூல் செய்துள்ளது டோணி படம்.

சுல்தான்

சுல்தான்

இந்த ஆண்டு வெளியான பாலிவுட் படங்களில் சல்மான் கானின் சுல்தான் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு அக்ஷய் குமாரின் ஏர்லிப்ட் மற்றும் ருஸ்தம் ஆகிய படங்கள் நல்ல வசூல் செய்துள்ளன. போகிற போக்கை பார்த்தால் டோணி ருஸ்தமை வசூலில் முந்திவிடும் போல.

English summary
Producers Fox Star Studios said that biopic MS Dhoni The Untold Story has earned Rs 204 crore at the box office globally. The film about Team India skipper M S Dhoni has earned Rs. 175.7 crore in India and Rs 29 crore overseas, producers said.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos